| 206. | வாணுதற் கெண்ணம்நன் றன்று; வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள்; பலிகொடு சென்று நகும்;நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன், திருமால் அவர்க்கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே. |
| 207, | தாழுஞ் சடை;சடை மேலது கங்கைஅக் கங்கைநங்கை வாழுஞ் சடை;சடை மேலது திங்களத் திங்கட்பிள்ளை போழுஞ் சடை;சடை மேலது பொங்கர(வு) அவ்வரவம் வாழுஞ் சடை;சடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே. |
அலைவாள்; வாயில் வந்தவற்றைப் பிதற்றுவாள், சிலபொழுது சிரிப்பாள்; பெருமூச் செறிவாள், தணிக்கலாகாத நோய் மிகுந்தவளாய்ச் சோர்வாள்;போராட்டமாக விக்குள் எழ விக்குவாள்; உடல் திமிர் ஏறியது போல முரித்துக் கொள்வாள். அந்தோ! இவ்வாறெல்லாம் மையல் மிகுகின்றாளே; (யான் என் செய்வேன்.) குறிப்புரை: "துயரும், மயரும்" என்பனவும் ஏனைய போலச் 'செய்யும்' என்னும் முற்றுக்களே. இப் பொதுவினை இங்குப் பெண்பாலில் வந்தது. இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி கவன்றுரைத்தது. அதிதீவிர பக்குவிகளது நிலைமை கண்டு உறவினர் கவறுதல் இதன் உள்ளுரைப் பொருள். 206. பொழிப்புரை: வளர்ந்த சடைகளையுடைய, அடியார்கள் 'எந்தை' என்று ஏத்தும் சிவபெருமான் பிச்சை ஏற்க வந்தால், என் மகள் 'நாண வேண்டுமே' என்று எண்ணாமல், விரைவில் பிச்சையை எடுத்துக்கொண்டு சென்று, அவன் எதிரிலே சிரிக்கின்றாள். அவன்மேல் விருப்பங் கொண்டு அவனுடன் நட்புக் கொள்ள நினைக்கின்றாள். அந்தப் பிரம விட்டுணுக்களாலே அடைதற்கரிய தலைவனைத் தான் அடைய விரும்பி இவள் இராப்பகலாக வருந்தி நகுதற் குரியளாதல் என்ன அறிவுடைமை? இவளுக்குப் புத்தி நல்லதாய் இல்லை. குறிப்புரை: நல்லது, இங்குப் பயன்படுவதை விரும்புவது. இது, தலைவியது பேதைமை பற்றிச் செவிலி இரங்கிக் கூறியது. இறைவன் அன்பர்க்கு எளியன் ஆதலையறியாத உலகர் அல்லாதார்க்கு அவன் அரியன் ஆகின்ற அஃது ஒன்றே பற்றி அன்பு செய்வார்மேல் இரக்கங் கொள்ளுதல் இதன் உள்ளுறை. "எந்தை" என்பதை ஒரு சிலர் கூற்றாக்காவிடின் முறை கெடும். 207. பொழிப்புரை: எங்கள் பெருமுனிவனாகிய சிவபெருமானுக்கு உள்ளவை நீண்டு தொங்கும் சடை. அச்சடையின்மேல் உள்ளது கங்கை நதியாதலின் அது கங்கை யாகிய
|