| 208. | முனியே, முருகலர் கொன்றையி னாயென்னை மூப்பொழித்த கனியே, கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன்; இனியேல்; இருந்தவஞ் செய்யேன் திருந்தவஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே. | | 40 |
நங்கை வாழும் சடையாகின்றது. அந்தச் சடை மேல் மற்றும் உள்ளது பிள்ளைத் திங்கள் (பிறை) ஆதலின் அந்தச் சடை பிள்ளைத் திங்களால் (பிறையால்) போழப்படும் (நுழைந்து செல்லப்படும்) சடையாகின்றது. அந்தச் சடைமேல் உள்ளது சீற்றம் மிக்க பாம்பு ஆதலின் அந்தச் சடை பாம்பு வசிக்கின்ற சடையாகின்றது. அந்தச் சடைமேல் உள்ளது கொன்றை மாலை (ஆதலின் அதுவே அவனுக்கு அடையாள மாலையாய் உள்ளது) குறிப்புரை: ஈற்றில் வருவித்துரைத்தது இசையெச்சம். "மேலது" என்பவற்றை அடுத்து வந்தன பலவற்றின் பின்னும் 'ஆதலால்' என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது. இரண்டாம் முறையாக வந்த "சடை" என்பவற்றிற்குச் சுட்டு வருவிக்க. 'பிள்ளை' என்பதை முன்னும் கூட்டி, 'பிள்ளைத் திங்கள்' என மாற்றியுரைக்க. புகழை மிகுத்துரைக்கின்றார் ஆதலின், சொற் பொருட் பின்வரு நிலையணி தோன்றப் பல தொடராற் கூறினார். எனினும், அடையாள மாலையாகிய கொன்றையைச் சிறப்பித்தலே இப்பாட்டிற்குக் கருத்தென்க. 'சிவபிரான் பெரு முனிவன்' என்பதை விசுவாதிகோ, ருத்ரோ, மஹருஷி:'1 என்னும் உபநிடதத்தாலும் அறியலாம், 'பற்றற்றவன், தவக் கோலம் உடையவன்' என்பது இதற்குக் கருத்து. "முன்னியாய் நின்ற முதல்வா போற்றி"2 என அப்பரும் அருளிச் செய்தார். இதன் பின்னும் 'உள்ளது' என்னும் எழுவாய் எஞ்சி நின்றது. 208. பொழிப்புரை: முனிவனே, நறுமணம் கமழ மலர் கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, எனக்குச் சாதலைத் தவிர்த்த கனியாய் உள்ளவனே, உனது வீரக் கழல் அணிந்த திருவடிகளைத் தவிர வேறு துணை ஒன்றும் இல்லேன்; (இவ்வுடம்பொடு நிற்றலால்) பெரியதவத்தைச் செய்ய இயலாமல் ஐம்புலன்களையே நினைந்து தமியேன் படுகின்ற இடர்ப்பாட்டினை யார்க்கு அறிவித்துத் தீர்வு காண்பேன்; இப்பொழுதே என்னை நீ ஏற்றுக்கொள். குறிப்புரை: முதற்கண், 'முனியேல்' எனப்பாடம் ஓதுவாரும் உளர். "என்னை" என்பது உருபு மயக்கம். அன்றி, 'மூப்பொழிந்து ஆண்ட' என ஒரு சொல் வருவித்து முடிப்பினும் ஆம். கனி, ஒளவை
1. மகாநாராயணோபநிடதம். 2. திருமுறை - 6.57.5
|