பக்கம் எண் :

119பொன்வண்ணத் தந்தாதி

209.சாற்றுவன் கோயில் தலையும் மனமுந் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்(து) ஆற்றியஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந்(து) என்மனத் தானென்(று) எழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.
210.சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்;
செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்;திணிந்த
கல்லாம் நினையா மனம்;வணங் காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவந் தானும் மனிதர்க்(கு) அசேதனமே.

42



உண்ட நெல்லிக் கனி போன்றது. இப்பாட்டு, பாசப் பற்று அற்றவழியும் வாதனை தாக்குதலைக் கூறியது.

209. பொழிப்புரை: யான் இப்பொழுது அன்பு என்னும் நெய்யைச் சொரிந்து, (அருளாகிய தீயை வளர்த்து) அதில் தலையையும், மனத்தையும் நிறுத்தித் தவம் செய்வேன்; அதனால் அவை யிரண்டையும் 'சிவனுடைய கோயில்' என்றே சொல்லுவேன். அழகிய சொல் மாலைகளைச் சிவனுக்கு அணிவிப்பேன்; தோத்திரங்களாய் உள்ளவற்றைச் சொல்லு வேன்; இவ்வாற்றால், 'சிவன் என் மனத்தில்தான் உள்ளான்' என்று பலரும் அறியக் கூறுவேன்.

குறிப்புரை: 'தலையும், மனமும் கோயில் எனச் சாற்றுவன் எனவும், 'நெய் சொரிந்து இவற்றால் தவம் ஆற்றுவன்' எனவும் இயைக்க. நெய்சொரிதலாகிய காரணத்தைக் கூறினமையால், தீ வளர்த்தலாகிய காரியம் கொள்ளப்பட்டது. 'என' என்பது எஞ்சிநின்றது. ஒருகாலை ஊன்றித் தவம் செய்தலேயன்றித் தலைகீழாக நின்று தவம் செய்தலும் உண்டு என்பதை அறிந்து கொள்க. புறத்து வளர்க்கும் அங்கியிலும், அகத்து வளர்க்கும் அங்கி சிறந்தது என்க. "சொல் மாலை" என்றது தாமே இயற்றுவனவற்றையும், "தோத்திரம்" என்றது முன்னோர் இயற்றியவற்றையும் என்க. "மாலையால்" என்பதை, 'மாலையை' எனத் திரிக்க. இனி - இப்பொழுது. 'தவம் செய்தல், சொல் மாலை அணிவித்தல், தோத்திரம் சொல்லுதல். இவற்றைச் செய்தல் அவ்வாறு செய்பவரது உள்ளத்தில் சிவன் வந்து குடிகொள்ளுதல் உறுதி' என்பது உணர்த்தியவாறு.

210. பொழிப்புரை: சோதிக்குட் சோதியாய் (ஒளிக்குள் ஒளியாய் - அறிவுக்குள் அறிவாய்) உள்ள சிவபெருமானுடைய பெயரைக் கேளாத செவிகள் செவிகள் அல்ல; ஒலி நுழையாத வன்மையை யுடையமரங்கள். அதனைச் சொல்லாத நாக்கள் நாவல்ல; உழுபடையின் நாக்கு, அவனைப் பரம்பொருளாகத் தெளிந்து