தொழாத கைகள் மண்ணால் செய்து வைக்கப்பட்ட போலிக் கைகள்; மனிதக் கைகள் அல்ல; அவனை நினையாத மனங்கள் மனங்கள் அல்ல; உளியால் போழ்ந்தாலும் போழப்படாத உறுதியான கற்கள்; அவனை வணங்காத தலைகள் தலைகள் அல்ல; பிற உடற் பகுதிகளுக்கு ஏற்றி வைக்கப்பட்ட ஒரு சுமைகள். மக்கட்கு அமைந்த பிற உறுப்புக் களும் (கண், கால் முதலியனவும்) அவனுக்குத் தம்மால் ஆகும் பணியைச் செய்யாவிடின் மனித உடல் உறுப்புக்கள் ஆகா; சடப் பொருட் பகுதிகளே ஆகும். குறிப்புரை: தோத்திரமும், சாத்திரமும்1 சிவனை, "சோதிக்குட் சோதி" எனக் கூறுதல் இங்கு நினைக்கத் தக்கது. தான், பன்மையொருமை மயக்கம். இங்குக் கூறியவாறே. கோளின் பொறியிற் குணமிலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.2 எனத் திருவள்ளுவரும் கூறினார். "வன்பராய் முகுடொக்கும் என் சிந்தை; மரக்கண் என் செவி; இரும்பினும் வலிது" எனவும், "நெஞ்சம் கல்லாம்; கண்ணினையும் மரமாம் தீவினை யினேற்கே" எனவும் போந்த திருவாசகத்தையும் காண்க.3 "திணிந்த" என்ற விதப்பினால் அதற்கு இவ்வாறு உரைக்கப் பட்டது. "மனிதர்க்கு" என்றதனால், 'மனித உடம்பும், அவற்றில் அமைந்த உறுப்புக்களும் சிவன் பணி செய்தற் பொருட்டே தரப்பட்டுள்ளன' என்பது விளங்கும். வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன். எனவும்4 "வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து" எனவும், | கால்களாற் பயன் என்!கறைக் | கண்டன் உறைகோயில் | | கோலக் கோபுரக் கோரணம் சூழாக் | கால்கலாற் பயன் என் |
| ஆக்கையாற் பயன் என்! - அரன் | கோயில் வலம்வந்து | | பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத இவ் | வாக்கையாற் பயன் என்.5 |
எனவும்,
1. திருமுறை - 5.97.3, சித்தியார் - சுபக்கம் - சூ. 11.8. 2. திருக்குறள் - 9. 3. திருவாசகம் - செத்திலாப் பத்து - 4 திருச்சதகம் - 21. 4. திருமுறை - 5.90.7. 5. திருமுறை - 4.9-8,9.
|