பக்கம் எண் :

121பொன்வண்ணத் தந்தாதி

211.தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால்,
மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யானரு ளாற்புழு வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே.


ஆமாத்தூர் - அம்மானைக் - காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கூறாத நாவல்லாம் கூறாத நாக்களே
ஆமாத்தூர் - அம்மானை கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே
ஆமாத்தூர் - அம்மான்எம் வள்ளல் கழல் பாரா வாழ்க்கையும் வாழ்க்கையே
ஆமாத்தூர் - நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.1

எனவும்,

மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ.2

எனவும் வருவன பலவும் கண்டுணர்க.

211, பொழிப்புரை: சிவபெருமானது அருள் வழியன்றிப் பிற வழிகளால் மலைபோலும் நிதியையும், பெரிய உலகம் முழுவதையும் பெற்றாலும் அவைகளை யான் என் மனத்தின் கண் நஞ்சினும் கடைப்பட்டனவாக என்றும் நினைப்பேன். கொல்லையில் நிற்கும் கொன்றை மரத்தில் தேனொடு மலரும் பூக்களால் ஆகிய மாலையையணிந்துள்ள சிவபெருமானது அருள்வழிப் புழுவாய்ப் பிறக்கினும் அதனையான் எனக்குத் தேவர்களது பொன்னுலகமே கிடைத்துவிட்டது போல என்றும் நினைப்பேன்.

குறிப்புரை: "சங்கரன்றன் அருளாலன்றி" என்பதனை முதலிற் கொள்க. "பிறந்திடினும்" என்னும் எதிர்மறை யும்மையை", பெற்றால்" என்பதற்கும் கூட்டுக. "மனக்கு" என்பது உருபு மயக்கம். 'மனத்துக்கு' என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது. "எனக்கு" என்பதன்பின் 'வாய்த்ததாக' என ஒருசொல் வருவித்து முடிக்க. திருவருளாலன்றிப் பிற வழியால் வருவன வினையொடு வருதலால் அசுத்தமும், திருவருள் வழியால் வருவன வினையின்றி வருதலால் சுத்தமும் ஆதல் பற்றி இவ்வாறு எண்ணினார். திருவருளால் அன்றி வினையால் மட்டுமே வருவனயாதும் இன்மையின்" பெற்றாலும்"


1. திருமறை - 2.44 4, 7, 8, 9, 10

2. சித்தியார் - சுபக்கம் - சூ - 2. 92.