பக்கம் எண் :

123பொன்வண்ணத் தந்தாதி

213.காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்;
நாம்முனஞ் செற்றதன்(று) ஆரையென் றேற்(கு)இரு வர்க்குமஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே.

45


214.அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை யாய சலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே.


என்பதன்பின் கூட்டுக. கவர்தல், இங்குப் போக்கு தல். போதல், பசலையால். தலைவி சிவனைத் தலைப்பட்ட வரும், காமன் பழ அடியார்களும் ஆதல் இதன் உள்ளுறைப் பொருள்.

213. பொழிப்புரை: அழகிய தட்பத்தை (கருணையை) உடையவராகிய சிவபெருமான் முன்னிலையில் ஒரு பெண் 'இப்பெருமான் (காமனை எரித்தவன், காலனை உதைத்தவன்) இவ்விரு செயல்களுள் முதலிற் செய்தது காமனை எரித்ததும் தான்' என்று சொன்னாள். அவட்கு எதிராக மற்றொருத்தி, 'இல்லை. காலனை உதைத்ததுதான் முதலிற்செய்தது' எனத் தன் கைகளை ஒன்றோடு ஒன்று மோதும்படி அடித்து உறுதி படக்கூறினாள். யான்'அச்சம் உண்டாக, அவ்விருவரில் நீவிர் முற்காலத்தில் முதலில் கொன்றது யாரை' என வினவினேன். பெருமான் அவ்விருவருக்காகவும் அஞ்சி, 'எவனை முதலிற் கொன்றது' என ஒன்றைத் திட்டமாக வாய்திறந்து கூறாமல், மௌனமாய் இருந்தார். (யான் இவரை, 'யாரிடத்தில் அன்புடையவர்' என்று நினைப்பது?)

குறிப்புரை: 'சிவபெருமானது பண்டைச் செயல்கள் பற்றி முன் பின் கால ஆராய்ச்சி செல்லாது' என்பதனை, ஓர் மகளிர் உரையாடலாக வைத்துக் கூறினார். "முன்னோ திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாளே"1 என்ற அப்பர் திருவாக்கையும் காண்க. நாம், அச்சப் பொருட்டாய உரிச்சொல்2 இறைவன் ஒருவர்க்கு மட்டும் உரியன் ஆகாமையும் இங்குக் குறிக்கப் பட்டது. "அந்தணர்" என்பது இங்குக் காரணப் பெயராய் நின்றது.

214. பொழிப்புரை: துறவிகள் போலப் பிச்சை ஏற்க வந்த இவரைப் பற்றி யான், 'இவர் இருக்கும் ஊர் ஆர் ஊர்' (யார் இருக்கும் ஊர்) என்று பிறரை வினாவினேன்; இவர் தாமே முன் வந்து, 'சாந்து



1. திருமுறை - 6.34

2. தொல் - சொல் - உரியியல்.