| 216. | பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ் சொற்கள் நும்மேல் ஏதப் படவெழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம்; நீரிறை செப்புமினே. | | 48 |
| 217. | செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்; மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கைவைத் தான்மனத்துக் கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத் தமும்அமைத்தான்; அப்பனை அம்மனை நீயென் பெறாதுநின் றார்க்கின்றதே. |
அச்ச மிலர், பாவமிலர், கேடு மிலர், அடியார் நிச்சம்உறு நோயு மிலர், . . . . . . . . . . . . . . . . . பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.1 என்றது காண்க. கிரீடித்தல் - விளையாடுதல். 216. பொழிப்புரை: பூதங்களையே படைகளாகக் கொண்டுள்ள புண்ணிய சொரூபரே, உம்மைப் பற்றிப் புறங் கூற்றுக்கள் நீர் குற்றப்படும்படி பலவாய் எழுகின்றன. (அவற்றை நீர் அறிவீரோ, அறியீரோ! அவற்றுள் தலையாயது) இணையாள் ஒருத்தியின் காதலில் உம்மை அகப்படுத்தற்குத் தனது கணையாகிய மலரை எய்த மன்மதனை நீர் உமது கண்ணாகிய மலரால் அழிவுபடுத்தியது. 'அஃது ஏன்' என்பதற்கு நீர் விடை கூறுவீர். குறிப்புரை: புறங் கூற்றுக்களாவன தன் கடமையைச் செய்ய வந்த காலனைக் காலால் உதைத்தது, முப்புரத்தவரை அழித்தது; தாருகாவன முனிவரது மனைவியரின் கற்பை நிலைகுலையச்செய்தது முதலியவை பற்றியன. 'இன்னோரன்னவற்றை நும் எதிரில் கூற மாட்டாது பலர் புறங் கூறுகின்றார்கள்' என்றபடி. 'மன்மதன் செய்தது, தனியராய் இருந்த உம்மை இல்வாழ்க்கையர் ஆக்குவிக்க முயன்றதே. அவனை அழிவு செய்தமை தகுமோ' என்பதாம். இவற்றிற்கெல்லாம் விடை, இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர்2 என அருளிச்செய்ததே என்பது கருத்து. ஆல் அசை. இறை - விடை. 'காரணம்' என்பதன்பின் 'என்' என்பது எஞ்சிநின்றது. 217. பொழிப்புரை: எல்லோரும் தங்கட்கு 'அப்பன்' என்றும், 'அம்மை' என்றும் சொல்லிப் போற்றுகின்ற இறைவன்,
1. திருமுறை - 1.18.1. 2. அற்புதத் திருவந்தாதி - 29.
|