| 218. | ஆர்க்கின்ற நீரும் அனலும் - மதியும்ஐ வாயரவும் - ஓர்க்கின்ற யோகும், உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் - பகலும் இரவுமெல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே. | | 50 |
கிண்ணம்போலும் தனங்களை யுடைய நின்மகளு டைய தனங்களுக்குத் தான் அணிந்துள்ள கொன்றைப் பூவின் நிறத்தைக் கொடுத்தான் (தனிமையால் உண்டாகும் பசப்பூரச் செய்தான்.) மை தீட்டப்பட்ட சிறந்த கண்ணிற்குத் தான் தரித்துள்ள, ஒழுகுகின்ற கங்கை நீரைக் கொடுத்தான், (கண்ணீர் விட்டு அழச் செய்தான்.) மனத்துக்குத் தான் அணிந்துள்ள, ஒப்பில்லாத, அழகுமிக்க ஊமத்தம் பூவைக் கொடுத்தான். (பித்தம் பிடிக்கச் செய்தான்) இதை யறியாது, 'இவள் ஏதோ தெய்வந்தீண்டப்பட்டாள்' என்று அதற்குப் பூசை போடுகின்றாயே! குறிப்புரை: இது வெறியடுத்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. ஞானியரை உலகர் ஏதோ மனநோய் உள்ளவராகக் கருதி அது தீரத் தெய்வங்களை வேண்டுதல் முதலியன செய்தலும், அவர்க்கு அறிவர் அறிவுறுத்தலும் இதன் உள்ளுறை. புரை - உயர்வு. 'ஊமத்தம் பூவைத் தலையில் சூடிக்கொண்டால் பித்தம் பிடிக்கும்' என்பது உலக வழக்கு. "அப்பனை" என்பதனோடு இயைய, "அம்மனை" என்பதிலும் இரண்டன் உருபு விரிக்க. பெறுதல், இங்கு வரைவு உடன் படுதல். 218. பொழிப்புரை: கார் காலத்தில் பூக்கின்ற கொன்றைப் பூவினாலாகிய மாலையைத் தனது அடையாளமாலையாகக் கொண்ட சிவபெருமானிடத்தில் நீர், நெருப்பு திங்கள், ஐந்து தலைப் பாம்பு - யோக நிலை, இல்லாள் - உருவம், அருவம் - புலி, மான் - பகல், இரவு - இவ்வாறு எல்லாம் ஒன்றுக் கொன்று பகையாய பொருள்கள். அப்பகை நீங்கி நட்புக் கொண்டு உடன் கலந்து வாழ்கின்றன. குறிப்புரை: 'இஃது அதிசயம்' என்பது குறிப்பெச்சம். ஆர்க்கின்ற - ஒலிக்கின்ற. ஓர்க்கின்ற - தியானிக்கின்ற. யோகு - யோகம். அஃது ஆகுபெயர் அந்நிலையைக் குறித்தது. 'யோகம் துறவிகட்கு உரித்து' என்பது பெரும்பான்மை. உரு - உருவத் திருமேனி. அரு - அருவத் திருமேனி - முழுமையாக அமைந்த புலித்தோல் உயிருடைய புலி பார்ப்பது போலத் தோன்றுதலின் "பார்க்கின்ற வேங்கை" என்றார். 'அதைக் கண்டு மான் அஞ்ச வில்லை' என்றபடி. மான் விலங்காதலுடன் மறி (கன்று) ஆதலின், 'உயிரில்லது' என அறியும் அறிவில்லதாம். பகல் வலக் கண்ணாகிய சூரியனாலும், இரவு இடக்கண்ணாகிய சந்திரனாலும் உளவாகின்றன. 'சிவபெருமானைச் சேர்ந்தவர்க்கு நடுவு நிலையே உளதாவதன்றி, உறவு பகைகள் உளவாவன அல்ல' என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. "யோகும், உமையும்" - என்றதனை,
|