பக்கம் எண் :

127பொன்வண்ணத் தந்தாதி

219.கலந்தனக்(கு) என்பலர் கட்டவிழ் வார்கொன்றை கச்(சு)அர(வு)ஆர்
சலந்தனக்(கு) அண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்து
அலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.

51.


ஒன்றொடொன் றொவ்வா வேடம்

ஒருவனே தரித்துக் கொண்டு

நின்றலால் உலகம் நீங்கி

நின்றனன்.

எனவும், உருவும், அருவும்" என்றதனை,

பந்தமும் வீடும் ஆய

பதபதார்த் தங்கள் அல்லான்;

அந்தமும், ஆதி யில்லான்

அளப்பிலன் ஆத லாலே

எந்தையான் 'இன்னன்' என்றும்,

'இன்னதாம், இன்ன தாகி

வந்திடான்' என்றும் சொல்ல

வழக்கொடு மாற்றம் இன்றே.1

எனவும் சிவஞான சித்தி நூல் விளக்குதல் காண்க. 'சிவபிரான் அணியும் கொன்றை கார்க் கொன்றையே' என்பதை "கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை"2 கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் - தாரன், மாலையன், மிலைந்த கண்ணியன்"3 என்பவற்றானும் அறிக.

219. பொழிப்புரை: இவளால் காதலிக்கப் பட்டவனுக்கு அணிகலம் ஆவன எலும்புகளே; அணியும் பூக்களாவன அரும்பவிழ்ந்த கொன்றைப் பூக்களே. (இவை சூடும் மலர் அல்ல.) அரைக்கச்சாவது பாம்பு. அவனோ நீர் இல்லாமல் நீருக்கு அருகில் வெம்மை பொருந்திய காட்டில் (ஈமத்தில்) ஆடுபவன். ஆகவே, அவன் ஒரு சாண் அளவினதான இடமும் 'தன்னுடையது' என்று இல்லாத அகதி. கழுத்தில் கறையுடை யனாய் எங்கும் திரிகின்ற அவனை நினைந்து இவள் மனம் அலைதல் என்னோ!

குறிப்புரை: இது, தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது. ஞானிகளது நிலைமை யறியாமல் உலகர் அவர்



1. சுபக்கம் - சூ - 1 - 51, 44.

2. புறம் - கடவுள் வாழ்த்து.

3. அகம் - கடவுள் வாழ்த்து.