பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை128

220.அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை முக்கண் முறைவனுக்கே.

52.



பொருட்டு இரங்குதல் இதன் உள்ளுறை, "ஆடி" என்றது பெயர். அலந்தலை - அலமரல். அது முன்னர் ஆகுபெயராய் அதனை உடையவனைக் குறித்தது. 'இவள் அழிகின்றது என்னே' எனத் தோன்ற எழுவாய் வருவித்து முடிக்க.

220. பொழிப்புரை: நான்கு மறைகளையும் அருளிச் செய்த, மூன்று கண்களையுடைய அறவோன் பொருட்டு எனது அரிய உயிர் போய்க்கொண்டிருக்கின்றது. அதுபோவதற்கு முன்னே மனக் கவலை உண்டாகின்றது; மயக்கம் ஒருகாலைக் கொரு கால் மிகுகின்றது; சங்க வளையல்கள் கழன்று வீழ்கின்றன; இறுமாந்திருந்த கொங்கைகளின்மேல் பீர்க்கம்பூப் போலும் பசலைகள் வெளிப்பட்டுக் கிடந்தன; கண்கள் நீரைப் பொழி கின்றன. வாய் புலர்ந்து விட்டது; மேகலைகள் போயே விட்டன. எனக்காக அவரிடம் தூது சென்று வந்தவர்கள் என்ன சொல்கின்றனரோ!

குறிப்புரை: 'அவர்களது வாய்ச் சொல்லைப் பொறுத் துள்ளது என் உயிரின் நிலைமை' என்பது குறிப்பெச்சம். இது தூது சென்றார் வந்ததை யறிந்து தலைவி அவர்சொல்லைக் கேட்க விதுப்புற்றுக் கூறியது. தூதுவிடக் கருதுதலோடு ஒழியாமல், தூதுவிட்டே நின்றமையால், இது, "மிக்க காமத்து மிடல்"1 என்னும் பெருந்திணை. 'நன்மைகள் பலவற்றை எய்தாது கழிகின்றது' என்னும் கருத்தால் தலைவி தனது உயிரை "ஆருயிர்" என்றாள் மால் - மயக்கம். பீர் - பீர்க்கு. அஃது இருமடி யாகுபெயராய் முன்னர் அதன் பூவையும், பின்னர் அப்பூப்போலும் பசலையையும் குறித்தது. மணிக்கோவைகளின் பன்மை பற்றி மேகலை பலவாகச் சொல்லப்பட்டது. மேகலையை, 'கலை' என்றது தலைக் குறை. தீவிரதர பக்கு வத்தில் ஞானம் பெற்றவர்கள் பரமுத்தியை அடைய வேட்கை மிக்கு, அடியவர் வாய்மொழிகளை நோக்கியிருத்தல் இதன் உள்ளுறை. 'இறைவன், துறைவன், துணைவன்' - முதலியன போல, 'முறைவன்' வகர இடைநிலை பெற்ற பெயர். இருந்த, கிடந்தன - நான்மறை, முக்கண் இவை முரண்தொடை; விரோத அணி.



1. தொல் - பொருள், அகத்திணையியல்.