| 221. | முறைவனை, மூப்புக்கும் நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந் துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா இறைவனை, எண்குணத் தீசனை, ஏத்தினர் சித்தந் தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே. | | 53 |
| 222. | ஒதவன் நாமம் உரையவன் பல்குணம்; உன்னைவிட்டேன்; போதவன் பின்னே; பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று; |
221.பொழிப்புரை: அறத்தின் வடிவானவனும், காலப் பழமைக்கும், நான்கு வேதங்கட்கும் முதலாய், ஏழு கடல் களால் சூழப்பட்ட ஏழு தீவுகளிலும் வழிபடப்படுபவனும், ஞானியர் சூழ்ந்துள்ள கயிலாய மலையில் இருப்பவனும், தனது அனாதி நிலையினின்றும் என்றும் குறைபடாத கடவுளும், எட்டுக் குணங்களையே ஐசுவரியமாக உடையவனும், தன்னைத் துதித்தவர்களது உள்ளத்திலே என்றும் உறைபவனும் பாம்புகளையே அணிகலமாக அணிந்தவனும் ஆகிய சிவபெருமானை யாம் இவ்வளவிலன்றி, வேறு எவற்றைச் சொல்லி ஓயாது துதிப்பது? குறிப்புரை: 'சிவனது அளவிறந்த புகழ்களில் நாம் அறிந்தன மிகச் சிலவே' என்பது கருத்து. "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்"1 ஆதலை, 'மூப்புக்கு முதல்' என்றார். முதல் - முதல்வன்; ஆகுபெயர். "முதல்" என்பதில் தொகுக்கப்பட்ட 'ஆய்' என்னும் வினையெச்சம், "துறைவன்" என்னும் குறிப்பு வினைப் பெயர் கொண்டது. உலக முழுவதிலும் உள்ளாரால் வழிபடப்படுதல் பற்றி, "ஏழ்கடல் துறைவன்" என்றார். சூழ்தலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. தொன்மை - அனாதி. அஃதே இயற்கையாதலை அறிக. எண் குணங்களாவன. 1 தன்வயம், 2 தூய உடம்பு, 3 இயற்கையுணர்வு 4 முற்றுணர்வு, 5 இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல், 6 முடிவில் ஆற்றல், 7 பேரருள், 8 வரம்பில் இன்பம் - என்பன.2 இவையே கடவுட் குணங்கள் ஆதலை ஓர்ந்துணர்க. தம், சாரியை. இன் சாரியை நீக்கித் தம் சாரியை கொடுத்தார். "பின்னை" என்பது 'மற்று' என்னும் பொருட்டு. "ஓதுதல்" என்பது இங்கு இடைவிடாது துதித்தலின் மேற்று. 222.பொழிப்புரை: அரிய தெய்வப்பெண் போன்றவளே, உன்னை நான் இப்பொழுது பெரிய தவக்கோலமாய் வளர்கின்ற
1. திருவாசகம் - திருவெம்பாவை 2. திருக்குறள் - 9 பரிமேலழகர் உரை.
|