| மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான் யாதவன் சொன்னான், அதுகொண் டொழியினி; ஆரணங்கே. | | 54 |
| 223. | ஆரணங் கின்முகம் ஐங்கணை யானகம்; அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்;தொன் மைக்கண்வந்த |
புல்லிய சடையை உடைய சிவபெருமான் பால் அனுப்புகின்றேன்; நீ அவனிடம் சென்று, அவனுடைய பெயர்கள் பலவற்றையும் சொல்; அவனுடைய இறைமைக் குணங்கள் பலவற்றையும் எடுத்துப் பேசு; அவன் எங்குச் சென்றாலும் அவனை விடாது அவன் பின்னே செல்; சென்று, அவனது வாழ்க்கைக்கு ஏற்ப உன்னைத் திருத்திக்கொண்டு அவனுக்குப் பொருந்தியவளாய் இரு. (மற்றும் அவன் மனம் இரங்க வேண்டிப்) பெரிய தவத்தைச் செய். (இவ்வளவும் செய்தால் அவன் ஏதாவது ஒரு முடிவைக் கூறாமல் இருக்க மாட்டான்.) அவன் என்ன முடிவைச் சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு வந்துவிடு. குறிப்புரை: இது சிவபெருமானிடம் தூது விடுப்பவள் சொல்லியது. 'சிவபெருமான் பேரிரக்க குணம் உள்ளவன்' என்பதும், 'அவனைப் பலபடியாலும் வழிபட்டால் அவன் இரங்காதொழியான்' என்பதும் அவரது நம்பிக்கை. நல்கா தொழியான் நமக்கென்றுன் | நாமம் பரவி நயனசீர் | | மல்கா, வாழ்த்தா, வாய்குழறா, | வணங்கா, மனத்தால் நினைந்துருகிப் | | பல்கால் உன்னைப் பாவித்துப் | பரவிப் பொன்னம் பலமென்றே | | ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி | யருளாய், என்னை உடையானே.1 |
என்றாற்போலும் திருவாக்குகளைக் காண்க. "மாதவம்" இரண்டில் பின்னது ஆகுபெயராய்த் தவக்கோலத்தைக் குறித்தது. "தவம் மறைந்து அல்லவை செய்தல்"2 என்பதிற் போல. 'வாழ்க்கையோடு' என்னும் மூன்றன் உருபு தொகுத் தலாயிற்று. 'புன் சடையானாகிய அவன்' என்க. 223.பொழிப்புரை: அரிய தெய்வப்பெண் போன்றவ ளாகிய இவளது முகம் மிக அழகிதாய் இருத்தலின் மன்மதன் வாழும் இல்லமாகின்றது; இவளது தோள்கள் தூங்கி யசைதலால்
1. திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 10 2. திருக்குறள் - 274
|