பக்கம் எண் :

131பொன்வண்ணத் தந்தாதி

பூரண கும்பம் முலையிவை காணப் புரிசடையெம்
காரணன் தாள்தொழும்; அன்போ பகையோ? கருதியதே.

224.கருதிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள்; காரிகையாள்
ஒருதின மும்உள ளாகவொட் டா(து)ஆடுங் காரொடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றையின்னே
தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழிருளே.

56



அவ்இல்லத்தில் தூக்கப்பட்டுள்ள தோரணங் களாகின்றன. அகன்ற அல்குல் மன்மதன் ஊரும் தேர் ஆகின்றது. தனங்கள் பழைய மரபின்படி ஏந்தி வரும் பூரண கும்பங்களாகின்றன. இவை யெல்லாம் பலர்க்கும் தெரிய இவள் வந்து எங்கள் சிவபெருமானது திருவடிகளை வணங்கு கின்றாள். ஆயினும் (இவள் மன்மதனது படைகளுள் ஒருத்தி யாதலின் இவள்) சிவபெருமானை (மன்மதனையும் மறந்து) காதலித்து வரவேற்று வரவேற்று வணங்குகின்றாளா? இல்லை; பகைமை காரணமாக வெறும் நடிப்பாக வரவேற்று வணங்கு கின்றாளா? இவள் மனத்தில் உள்ளது என்ன?

குறிப்புரை: சிவபெருமான் வீதியுலா வரும்பொழுது வரவேற்று வணங்குகின்ற பலருள் காதல் பொங்க அவ்வாறு வணங்குவாள் ஒருத்தியைக் கண்டோர் ஐயுற்றுக் கூறியது. அவளது பேரழகும், முகக் குறிப்பும் அவர்களது ஐயத்திற்குக் காரணம். மெய்யன்பர்களது உண்மையன்பின் பெருமையை அறியாது உலகர் அவர்களையும் தம்முட் சிலராக வைத்துக் குறைத்து எண்ணுதல் இதன் உள்ளுறை. அனைத்து அழகிலும் முகத்தழகே தலையாயது ஆதலின் அதனையுடைய முகமே மன்மதனது இல்லமாகச் சொல்லப்பட்டது. ஏனைய வெளி உவமைகள் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையின் பொதுத் தன்மைகள் விரித்துரைக்கப்பட்டன. காரணம் - முதல்வன். தொழும். 'செய்யும்' என்னும் முற்று.

224. பொழிப்புரை: ஊரவரே, நீவிர் ஆற்ற வேண்டிய கடமையாகக் கொண்டது யாதொன்றும் இல்லையாயினும், யான் சொல்வதைக் கேட்டருளுங்கள். இன்று வர இருக்கும் இருட்பொழுது இந்த அழகி இனி ஒரு நாளாயினும் வாழ விடாது. ஆகையால் (நீவிர் அருள்கூர்ந்து) பகையாகிய அசுரர் பலர் அழியும்படி போர் செய்த திருமாலை இடப ஊர்தியாக உடைய புண்ணிய சொரூபனாகிய சிவபெருமான் அணிந்துள்ள அழகுமிக்க, அன்றலர்ந்த கொன்றைப் பூமாலையை இப்பொழுதே சென்று அவனிடம் விண்ணப்பித்து வாங்கி வந்து தாருங்கள்; எல்லோருக்கும் நல்லதாயிடும். தாராது விடிலோ, இருட்பொழுது இவளை இன்று கொன்றுவிடும்.