| 225. | இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமரையால்; பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை; புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பௌவந் தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மாஅரன் ஆயினனே. | | 57 |
| 226. | ஆயின அந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள் போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே |
குறிப்புரை: இது, தலைவி ஆற்றாமை மிகுவது கண்டு தோழி அயலாரிடம் இரங்கிக் கூறியது. நாணழிந்து அயலார் அறியக் கூறினமையின் இது பெருந்திணைப்பாலது. தாழ் இருள் - இனித் தங்க வரும் இருள்; எதிர்கால வினைத் தொகை. இருள் ஆகுபெயராய் அது வருவதற்குரிய காலத்தைக் குறித்தது. தீவிரதர பத்தியால் சிவனை அடைய விரையும் அன்பரது நிலையை அறிந்து அவரோடு உடன் உறைபவர் அவ்வன்பரது நிலைமையை அடியார்கள் அறியக் கூறுதல் இதன் உள்ளுறை. 'தலைவன் தான் அணிந்திருக்கும் மாலையைக் கழற்றி ஒருத்தி அணிந்து கொள்ள இசைந்து தருவானாயின், அவன் அவளைக் கைவிடாது தன் துணைவி யாகக் கொள்ளல் வேண்டும்' என்பது அறநெறி. அதனால் துயர் கூருந் தலைவியரை ஆற்றுவிக்கத் தலைவன் அணிந் திருக்கும் மாலையை இரத்தல் அகப்பாட்டுக்களுள் சொல்லப் படுகின்றது. காரிகை - அழகு. ஒடுங்கார் - பகைவர். 225.பொழிப்புரை: சிவபெருமான் கறுத்த கண்டத்தை யுடைமையால் இரவாய் இருக்கின்றான்; தனது திருமேனி ஒளியால் பகலாய் இருக்கின்றான்; மானைக் கொண்டிருந் தலால் குறிஞ்சி நிலமாய் இருக்கின்றான்; அடையாளமாகப் பொருந்திய, மணங்கமழும் கொன்றையை அணிந்திருப்பதால் முல்லை நிலமாய் இருக்கின்றான்; பாம்புகள் இயங்கப் பெறுதலால் புற்றாய் இருக்கின்றான்; ஒளிபொருந்திய சந்திரன் தவழப் பெறுதலால் ஆகாயமாய் இருக்கின்றான்; தெளிவாகிய நீரைத் தாங்குதலால் கடலாய் இருக்கின்றான்; இவ்வாறு அருள் காரணமாக அவன் பலப்பல பொருள் வடிவாய்க் காட்சி யளிக்கின்றான். குறிப்புரை: "தன்" என்பது ஆகுபெயராய்த் தனது உடம்பைக் குறித்தது. மரை - மான். 'மதியால்' என்னும் மூன்றன் உருபு தொகுத்தலாயிற்று. "விசும்பால்" என்னும் ஆல், அசை, சிவபிரானது தோற்றத்தை வியந்து கூறி 'இத்தனைக்கும் காரணம் அவனது அருள்' என்றபடி. 226.பொழிப்புரை: மன்மதனது கையில் உள்ள படைக்கலத்திற்கு (கணைகளுக்கு) அவைகளைச் செயற்படாத படி கட்டி
|