| பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல் ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டவெம் ஆயிழைக்கே. | | 58 |
| 227. | இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால் பிழையாள் 'நமக்கிவை கட்டுண்க' என்பது பேச்சுக்கொலாம்; கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்; குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே. |
வைக்கின்ற கயிறுபோலத் தோன்றுகின்ற பல சடைகளை யுடைய எம் பெருமானார்க்கு அன்பு செய்த எங்கள் மகளுக்கு இடையில் உடுத்துள்ள உடையும், கையில் அணிந்துள்ள வளையங்களும் அவளை விட்டு நீங்கிப் போய்விட்டன. வாள் போன்ற கண்களில் தீட்டப்பட்டுள்ள மையோடு வீழ்கின்ற கண்ணீர்த் துளிகள் மார்பிடையே தாரையாய்ப் பாய்கின்றன. ஆகவே, அறவோர் கூறும் மெய்ம்மொழி இவள்பால் மெய்யாகி விட்டது. குறிப்புரை: அம்மொழியாவது 'பற்றற்றான் பற்றினைப் பற்றினால் மற்றைய எல்லாப் பற்றுக்களும் அற்றுவிடும்' என்பது1 பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றிஅப் பற்றை அறுப்பர்என் றுந்தீபற2 என்னும் திருவுந்தியாரையும் காண்க. வேள் - மன்மதன். கர பத்திரம் - கை வாள். அது பொதுவே 'படைக்கலம்' என்னும் பொருட்டாய்க் கணையைக் குறித்தது. மன்மதனது குறும்பு சடையை யுடைய யோகிகள்பால் செல்லாமை பற்றிச் சிவபெருமானது சடைகளை அவனது கணைகளைக் கட்டிப் போடுகின்ற கயிறாக உவமித்தார். "வேங்கைக் கர பத்திரத்துக்கு" என்பது முதலாகத் தொடங்கி, 'அந்தணர் வாய்மை ஆயின' என மாற்றி, இறுதியில் வைத்து உரைக்க "அந்தணர்" என்றது அறவோரை. 'வாய்மை' என முன்னர் வந்தமையால் பின்னும் அதனைக் கூறாது வாறா "ஆயின" என்றாள். இது காதலால் நலிகின்ற தன் மகளது நிலைமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது ஆகலின், அந்தணர் வாய்மை யைப் புகழ்ந்தது வஞ்சப் புகழ்ச்சியாம். எனினும் அடியவர் நோக்கில் உண்மையே உள்ளுறைப் பொருளில் செவிலி, உலகர். 227.பொழிப்புரை: மூங்கில்கள் நிறைந்துள்ள 'திருக்கழுக்குன்றம்' - என்னும் மலைமேல் வாழ்கின்றவனும், வரையறைப் படாதவனும் ஆகிய சிவபெருமானை இவள் காதலித்தாள்; அஃது எங்ஙனமெனின், இவளது அழகிய கண்கள் குழை பொருந்திய
1. திருக்குறள் - 350. 2. உந்தி - 15.
|