| 228. | கூடிய தன்னிடத் தானுமை யாளிடத் தானைஐயா(று) ஈடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின் பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்(டு) ஆடிய நீறுசெஞ் சாந்திவை யாமெம் அயனெனவே. | | 60 |
காதுகளுடன் சென்று சேர்ந்தன. ('நன்றாகத் தன் கண்களை உருட்டி இவள் சிவபெருமானை நோக்கினாள்' - என்றபடி) அதனால் அணிகள் நிறைந்த, அழகிய இவளது கொங்கைகள் மிகவும் பூரித்தலால் இவளுடைய இடை கொங்கைகளைச் சுமக்க மாட்டாது ஒடிந்து கொண்டிருக்கின்றது. அஃது அறவே ஒடிந்துவிட்டால், இவள் பிழைக்க மாட்டாள் (என்பதைச் சொல்ல வேண்டுமோ! காதலால் இவள் உடம்பு பூரித்தலை, 'நமக்குக் கட்டுப்பட்டு அடங்குவதாக' என நாம் சொல்வது வெறும் பேச்சே.) குறிப்புரை: 'அதனால் நாம் சிவபெருமானிடம் சென்று முறையிட்டுக் கொள்வதே வழி' என்பது குறிப்பெச்சம். இதுவும் மேற்கூறிய துறையே. திரிபின்றி உறைத்த பத்தியுடையவாது நிலைமையை உணரும் பொழுது உலகவர் தம் செயல் அற்று அவர்வழி நிற்றல் இதன் உள்ளுறை. கண்ணப்பர் அடைந்த நிலைமைக்கு முதலில் வருந்தித் தெரிவிக்க முயன்ற தந்தை நாகனும், பிற வேடர்களும் பின்னர்ச் செயலற்றுத் திரும்பினமை இதற்கு எடுத்துக்காட்டாகும். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. அகண்டனை, 'கண்டன்' என்றது தலைக்குறை. "காதலித்தாள்" என்பதன்பின், 'எங்ஙனம் எனின்' என்பது வருவிக்க. 'கண்கள் செவியொடு கூடின' என்றது நன்றாகப் பார்த்தமையைக் குறிப்பால் உணர்த்தியது. வீங்கி - வீங்குதலால். "பிழையாள்" என்பதின் பின் இசையெச்சம் வருவிக்கப்பட்டது. கொல், ஆம் அசைகள். 228.பொழிப்புரை: உமையவளை விரும்பிக் கூடிய தன் திருமேனியில் அவளை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, 'இவன் பாடியன நான்கு வேதங்கள்; வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே' என அடையாளம் கண்டு, 'நெருப்பினது நிறம் இவன் தலையிலே உள்ள பல சடைகளிலும் உள்ளது' எனச் சொல்லி வணங்குங்கள். குறிப்புரை: 'வணங்கினால் பயன் பெறுவீர்' என்பது குறிப்பெச்சம். "இடத்தான்" என் இரண்டில் முன்னது, ஏழாவ தன் பொருளில் வந்த மூன்றன் உருபை ஏற்ற பெயர். அம் மூன்றன் உருபு, பின் வந்த, "இடத்தான்" என்னும் குறிப்பு வினையோடு முடிந்தது. இடத்தான் - இடப்பாகத்திலே உடையவன், 'ஐயாற்றின்கண்' - என உருபு விரிக்க. 'ஈண்டிய' என்பது இடைக்குறைந்து, "ஈடிய" என
|