பக்கம் எண் :

135பொன்வண்ணத் தந்தாதி

229.அயமே பலியிங்கு; மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும்? பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால்;
புயமேய் குழலியர் புண்ணியர்; போமின் இரத்தல்பொல்லா;
நயமே மொழியினும் நக்காம மாவும்மை நாணுதுமே.

61



வந்தது. ஈண்டுதல் - நெருங்குதல். பின் இரண்டு அடிகள் அடையாளம் காட்டின. ஆம் - இவன்பால் உள்ளன. இதன்பின் 'ஆகலின், இவன்' எனவும், "எம் அயன்" என்பதன்பின் 'கண்டு' எனவும் வேண்டும் சொற்கள் வருவித்து, 'எரி வண்ணம் சடை மேற்று எனப் பணிமின்' என முடிக்க. ஐயன், 'அயன்' எனப் போலி யாய் வந்தது.

229.பொழிப்புரை: தாணுவே, (தலைவரே) நீர் இனிய வார்த்தைகளையே பேசிய போதிலும், உமது கோலம் திகம்பர மாய் (நிருவாணமாய்) உள்ளது. அதனால் உம்மைக் காண நாங்கள் வெட்கப்படுகின்றோம். அதனால், உம்முடைய வயிற்றுக்கு இட வேண்டுவது போல இங்கு நீர் பிச்சை ஏற்க வந்த செயலும் ஐயத்திற்கு உரியதே. 'பிச்சை யிடுமின்; இட்டால் உங்கட்குப் புண்ணியம்' என்பன போல. 'நீவிர் சொல்லும் சொற்களும் உண்மைதாமோ' என ஐயுறுவேண்டி யுள்ளது. இவைகிடக்க, நீர் ஏறிவந்திருக்கின்ற, பசுக்களுக் கெல்லாம் தலையாய எருது எங்களைப் பாய வருகின்றது. ஆகவே, தங்கள் தோள்களின்மேல் நீர் பொருந்த இசைகின்ற மகளிர்தாம் உண்மையில் புண்ணியம் செய்பவராவர் (பிச்சை யிடுவோர் புண்ணியரல்லர்) இப்படி நீர் பிச்சை யெடுப்பது தீதாகும். இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்.

குறிப்புரை: இது, பிச்சைக் கோலத்தவராய்ச் சென்ற பெருமானைக் கண்டு காதலித்த மடவார் கூற்று, உண்மையில் அவரைக் கண்டு அவர்கள் நாணமும், வெறுப்பும் கொண்டவராயின் பொருக்கென இல்லத்துக்குள்போய்விட வேண்டியவர் தாமே? அதை விடுத்துப் பல வார்த்தைகளை விரிப்பது ஏன்?

'தாணு' என்பது விளி. அது பன்மையொருமை மயக்க மாய் நின்றது. குக்கி (குட்சி) = வயிறு. 'குச்சிக்கு இட இங்குப் போந்த பலி (ஏற்றல் செயல்) ஐயமே' என்க. ஐயம், "அயம்" எனப் போலியாயிற்று. 'மாடு உளஏறு, பசுபதியாம் ஏறு' எனத் தனி இயைக்க. மாடு - பக்கம். 'உம் பக்கம்' என்றபடி. பயமே - பொருள் உடையனதாமோ? ('உண்மையோ' - என்றபடி.) "குழல்" என்னும் விதப்பினால் 'வார் குழல்' (நீண்ட கூந்தல்) எனக் கொள்க. "ஏய குழலியர்" என்றது, 'ஏய இசையும் குழலியர்' என்றபடி. 'குழலியரே' என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. 'அவரே புண்ணியர்' என்றது, 'அந்தப்