பக்கம் எண் :

மூலமும் உரையும்111



4-7: மற்றவர்.................................இருந்தும்

     (இ-ள்) அவர் தரும் இடியும் துய்த்து-அவ்வெயின மகளிர் நமக்கு அன்புடன் அளித்த தினைமாவினையும் உண்டு பின்னர்; சுரைக்குடமெடுத்து-சுரை நெற்றாலாகிய குடத்தைக் கொண்டு; நீள் நிலைகூவல் தெளிபுனல் உண்டும்-ஆழ்ந்த நிலையினையுடைய கிணற்றின்கண் முகந்து தெளிந்த நீரைப் பருகியும் என்க.

     (வி-ம்.) அவர்-எயிற்றியர். தரும் என்றது அன்போடு அளித்த என்பதுபட நின்றது. இடி-மா. ஈண்டுத் தினைமா என்க. சுரைக்குடம்-சுரைக் குடுக்கை. நீள்நிலை கூவல் என்புழி நீளம் ஈண்டு ஆழத்தைக் குறித்து நின்றது.

8-11: பழம்..................................உண்டெனின்

     (இ-ள்) பழம்புல் குரம்பை இடம் புக்கிருந்தும்-அவருடைய பழைய புல்லால் வேய்ந்த சிறுகுடிலில் புகுந்து தங்கியும்; முடங்கு அதன் உறுத்த முகிழ் நகை எய்தியும்-அவ்வெயிற்றியர் நமக்குப் பாயலாகச் சுருட்டிவைத்த தோலை விரித்துக் கொடுப்ப யாம் அச்செயலைக் கண்டு நம்முள் புன்சிரிப்புக் கொண்டும் பின்னர்; உடன் உடன் பயந்த கடஒலி ஏற்று-அடிக்கடி தோன்றிய கடமாவினது முழக்கத்தைச் செவியில் ஏற்றுக் கொண்டும்; நடைமலை எயிற்றின் இடைதலை வைத்தும்-யானையினது மருப்பின்மேல் தலைவைத்துப் பாயல்கொண்டும்; உயர்ந்த இன்பு அதற்கு-அற்றைநாள் நுகர்ந்த பேரின்பத்திற்கு; உவமம் இன்று உண்டெனின்-ஓர் உவமையும் இல்லை; ஓர் உவமை கண்டு கூறவேண்டுமெனின், என்க.

     (வி-ம்.) புற்குரம்பை-புல்லால் வேய்ந்த குடில். தம் தகுதிக் கொல்லாது என்பது தோன்றப் பழம்புற் குரம்பை இடம் என்றான். முடங்கதள்-சுருட்டிவைத்த தோல். புலி முதலியவற்றின் தோலைப் பாயலாகப் பயன்படுத்துதல் அவர் இயல்பு. உறுத்த- விரிப்ப. அதனைக் கண்டு நகையெய்தி என்க. தமது தகுதிக்கு ஒவ்வாதிருந்தும் அவர் அன்பு கருதி ஏற்றுக்கொண்டமையால் தம்முள் புன்னகை கொண்டனர் என்பது கருத்து. முகிழ்நகை என்புழி நிலைமொழி இறுதி ழகர ஒற்று ணகர ஒற்றாய்த் திரிந்தது. முகிழ்நகை-புன்முறுவல். நடைமலை-யானை. வைத்தும் நுகர்ந்தன் இன்பம் என ஒரு சொல் வருவித்தோதுக. அதற்கு உவமம் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. உவமமும் இன்று என மாறுக. கடவொலி என்றும் பாடம். பாலைநிலமாகலின் இப்பாடம் சிறவாமை யுணர்க.

12-15: முலை.....................................நன்னாள்

     (இ-ள்) அணைந்த மூன்று முலை சிறுநுதல் திருவினை-உயர்ந்த மூன்று முலைகலையும் சிறிய நெற்றியினையுமுடைய