|
43 - 6 : ஓம்......................................விடுத்தோய்
(இ-ள்) பிரமம் பேசிய
நால் மறை விதியை-தானே பிரமம் என்று செருக்குற்று வாய் மதம் பேசிய இருக்கு முதலிய
நான்கு மறைகளையுமுடைய படைப்புக் கடவுளாகிய நான்முகனை: ஓம் எனும் எழுத்தில் நடுங்கு
சிறை வைத்து-ஓம் என்னும் எழுத்திற்குப் பொரு வினவுமாற்றால் நடுங்குதற்குக் காரனமான
சிறைக்கோட்டத்தில் இட்டு; படைப்பு முதல் மாய வான் முதல் கூடி தாதையும் இரப்ப-படைத்தல்
முதலிய தொழில்கள் நடவாமையாலே அதுகண்ட தேவர்கள் முதலியவரோடு கூடி வந்து நின்தந்தையாகிய
சிவபெருமானும் நின்னை இரந்து வேண்டிக் கோடலால்; தளையது விடுத்தோய்-அந் நான்முகனை
அவர்கள் வேண்டுகோட்கிணங்கிச் சிறை வீடு செய்தருளிய பெருமானே! என்க.
(வி-ம்.) பிரமன்
பேசிய-தானே பிரமம் என்று வாய் மதம் பேசிய என்க. ஓம் எனும் எழுத்திற்குப் பொருள்
வினவ அவன் அதற்கு விடை கூறமாட்டாமையின் சிறையில் வைக்கப்பட்டான் என்பது கருத்து.
விதி-பெயர்; படைப்புக்கடவுள் என்க. நான்மறை-இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன.
நடுங்கு சிறை-நடுங்குவதற்கு காரணமான சிறை. படைப்பும், காத்தலும், அழித்தலும் ஆகிய
முத்தொழிலும் மாய என்க. வான்: ஆகுபெயர்; தேவர்கள் முதலியோரோடு கூடிவந்து இரப்ப
என்க. சிறைக்கோட்டத்தில் வைக்குங்கால் விலங்குபூட்டி வைத்தல் மரபாதலின் தளையது
விடுத்தோய் என்றார். தளையது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி. விதியைச் சிரைவைத்துப்
பின்னர் வானவரும் தாதையும் இரத்தலாலே விடுத்தோய் என இயைக்க படைப்பு முதல் மாய
என்றது இரப்ப என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது,
47
- 9: கூடம்.........................விரித்தோய்
(இ-ள்) கூடம் சுமந்த
நெடுமுடிநேரி-அண்ட கடாகத்தைத் தாங்கி நின்ற நெடிய உச்சியினையுடைய நேரிமலையானது;
விண் தடையாது-விண்ணிடத்து வழியைத் தடைசெய்யாமைப் பொருட்டு; மாண்புகப் புதைத்த-நிலத்திற்
புகும்படி அழுத்திய; குறுமுனி தேற-அகத்திய முனிவன் மெய்ப் பொருளை அறிந்துணர்ந்து தெளியும்படி;
நெடுமறை விரித்தோய்-நெடிய மறைப் பொருளை விரித்துச் செவியறிவுறுத்த பெருமானே! என்க:
(வி-ம்.) கூடம்-அண்டகடாகம்
இனி, கூடம் சுமந்த என்பதற்கு மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டங்களைத் தாங்கியுள்ள
எனப் பொருள் கொள்ளினும் பொருந்தும். என்னை! மாடஞ்செய்....................கூடஞ்செய்
சாரல் கொடிச்சி யென்றோ நின்று கூறுவதே எனவரும் திருக்கோவையார் 129 ஆம் செய்யுளுக்கு
கல்.-2
|