|
அதன் உரையாசிரியர்,
கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை என உரைவகுத்தலானும் உணர்க.
நேரி-சோழநாட்டின் கண்ணதாகிய ஒரு மலை. தடையாது-தடைசெய்யாமல். நேரிமலை வானுற வளர்ந்து
விண்ணில் வானவர் செல்லும் வழியைத் தடைசெய்து நின்றது ஆதலின் அகத்தியர் அதனை
நிலத்தில் அழுத்தி வழியுண்டாக்கினர் என்பது கருத்து. இனி முருகப்பெருமான் குறுமுனிக்கு
மறைமொழி செவியறிவுறுத்தியதனை,
|
இன்னபல் வரமு
நல்கென் றிரந்தனன் முனிவர் கோமான்
அன்னனணம் வரங்க ணல்கி யறுமுகக் கடவு ளன்னான்
தன்னைநற் றமிழின் பாடை தனக்குமுன் குரவ னாக்கிப்
பொன்னிவர் கோயி லுள்ளாற் போதந்து ஞானங் கூறும்
|
(தணிகை.
அகத்தியர், 148) எனவரும் செய்யுள் முதலியவற்றால்
உணர்க. குறுமுனி-அகத்திய முனிவங் குறுமுனிதேற நெடுமறை விரித்தோய் என்புழிச் செய்யுளின்ப
முணர்க.
50 - 51: ஆறு..............................பொலிந்தோய்
(இ-ள்)
ஆறுதிரு எழுத்தும் கூறும் நிலைகண்டு-நினக்குரிய சரவணபவ
என்னும் ஆறு திருவெழுத்துக்களையும் ஓதுதற்குரிய முறைமையினை யுணர்ந்து ஓதி; நின் தாள்
புகழுநர்-நின்னுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடுகின்ற நின் அன்பர்களுடைய; கண்ணுள் பொலிந்தோய்-அகக்
கண்ணினூடே அருளுருக் கொண்டு பொலிவு பெற்றுத் திகழ்ந்தோய் என்க.
(வி-ம்.)
ஆறுதிருவெழுத்து-சரவணபவ என்பன; குமராயநம
என்பனவுமாம். ;முருகாய நம என்பனவுமாம்.
கூறும்நிலை-ஓதும் முறைமை. கண்டு-அறிந்து. புகழுநர்-புகழ்ந்து பாடுவோர். கண்-அகக்கண்
|
அஞ்சு முகந்தோன்றில்
ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்
(-திருமுருகு.
பின்சேர்க்கை வெண்பா 6)
|
எனவரும் வெண்பாவையும்
ஈண்டு நினைக.
52
- 55: மணிக்................................ஆதலின்
(இ-ள்) மணிக்கால்
அறிஞர் பெருங்குடித்தோன்றி-மணிகளின் பிறப்பிடத்தை அறியும் மணிவணிகரது பெரிய குடியின்கண்
மூங்கைப் பிள்ளையாய்ப் பிறந்து; இறையோன் பொருட்கு-இறையனார் அருளிச் செய்த அகப்பொருள்
இலக்கணமாகிய பொருள் நூலுக்கு; பரணர் முதல் கேட்ப-பரணர்
|