பக்கம் எண் :

252கல்லாடம்[செய்யுள்28]



எனவும் வரும் பரஞ்சோதிமுனிவர் வாக்காலும் உணர்க. தேவர்கோன் ஓங்கும்படி உருநிறுத்தி இழிச்சிய கோயில் என் இயைபு காண்க.

11-12: கருவி....................................பொதியத்து

     (இ-ள்) அடிக்கடி கருவிவானம் பொழியும்-திங்கள் மும்முறையாக அடிக்கடி மின்னல் முதலிய தொகுதிகலையுடைய முகில் மழைபொழிதற்கிடனான; கூடம் சூழ்ந்த நெடுமுடி பொதியத்து-தேவகோட்டங்கள் சூழ்ந்துள்ள நெடிய முடியினையுடைய பொதிய மலையின்கண் என்க.

     (வி-ம்.) திங்கள் மும்மாரி பொழியும் என்பார் அடிக்கடி பொழியும் என்றார். அடிக்கடி என்றது அணித்தணித்தாக என்றவாறு. கருவி-தொகுதி. வானம்: ஆகுபெயர். கூடம்-நன்றாகச் சூழப்பட்ட தேவகோட்டம்.

13-16: கண்..............................காத்தும்

     (இ-ள்) கண்நுழையாது காட்சிகொளத்தோன்றிய வெறிவீ சந்தின் நிரை இடை எறிந்து-காண்போர் கண்ணொளி தன்னகத்தே நுழையப்படாததாய்ப் புறத்தே நின்று நோக்குவார்க்குக் காட்சி இன்பமுண்டாடக் காணப்பட்ட நறிய மலர்களையுடைய சந்தனமரங்களின் வரிசையினை இடைவெளியுண்டாகும்படி வெட்டி வீழ்த்தி; மற்று அது வேலிகொள வளைத்து வளர் ஏனல்-பின்னரும் அச்சந்தன மரத்தினையே வேலியாகவைத்து வளைத்துக் கட்டியதனால் அப்புனத்திலே வலராநின்ற தினையினை; நெடுங்கால் குறுஉழி இதண்உழை காத்தும்-நெடிய கால்கலையும் குறிய இடத்தினையுமுடைய பரணிடத்து காவல் செய்தும் என்க.

     (வி-ம்.) கண்: ஆகுபெயர். காட்சி: ஆகுபெயர். வெறி-நறுமணம். வீ-மலர். சந்து-சந்தனம். மற்றது: சாதி ஒருமை. சந்தன மரத்தை வெட்டி அதனையே வேலியாக்கி என்பது கருத்து. ஏனல்-தினை. நெடுங்கால் குற்றுழி என்புழிச் செய்யுளின்பமுணர்க. உழை இருந்து என ஒருசொல் வருவித்துக்கொள்க. இதண்-பரண்.

17-20: தேவர்...............................குடைந்தும்

     (இ-ள்) தேவர்கோமான் சிரை அரி புண்ணினுக்கு ஆற்றாது-இந்திரன் தம்முடைய சிரகுகளை அரிந்தமையாலுண்டான புண்ணால் உண்டாகும் துன்பத்திற்கு ஆற்றாமல்; பெருமுழை வாய்விட்டுக்கலுழ்ந்து என-தமுடைய பெரிய முழைகளாகிய வாயைத் திறந்து அழுதாற்போலே; கமம் சூல்கொள்மூ முதுகு குடியிருந்து வன் உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும்-நிறைந்த சூலினையுடைய முகிலள் தம் முதுகிலே