பக்கம் எண் :

28கல்லாடம்[செய்யுள்1]



16 - 17: கல்லா................................பெருத்தன

     (இ-ள்) துணைமுலை-எம்பெருமாட்டியினுடைய கொங்கைகளிரண்டும்; கல்லாக் கயவர்க்கு-கற்றிலாத கீழ்மக்களுக்கு; அருநூல் கிளைமறை சொல்லினர் தோம் எனப் பெருத்தன-உணர்தற்கரிய நூலாகிய கிளைகளையுடைய மறைகளின் பொருளை அறிவுறுத்திய ஆசிரியர்பால் குற்றம் பெருத்தாற்போல பெருத்தன என்க.

     (வி-ம்.) இஃதென் சொல்லியவாறோ வெனின் கயவர்களுக்கு மெய்ந்நூல் உணர்த்துதல் பெருங்குற்றமாம் என்பது பற்றித் தலைவியின் கொங்கையின் பெருமையை உணர்த்துதற்குக் கயவருக்கு மறைப்பொருளை உணர்த்திய ஆசிரியன்பால் குற்றம் பெருகினாற் போலே என உவமையாக்கி உரைத்தபடியாம். இனி இங்ஙனமே,

உசாவி னன்ன நுண்ணிடை யுசாவினைப்
பேதைக் குரைப்போன் பிழைப்பிற் றாகிய
பொற்பமை கணங்கிற் பொம்மல் வெம்முலைப்
பட்டத் தேவியை”
(பெருங். 5. 6. 5-8)

எனவும்,

அவாப்போ லகன்றத னல்குற்றமேற் சான்றோர்
உசாப்போல வுண்டே மருங்குல்-உசாவினைப்
பேதைக் குறைப்பான் பிழைப்பிற் பெருகினவே
கோதைக்கொம் பன்னாள் குயம்”


(யா-கா. ஒழிபு. 8)

எனவும் பிற சான்றோரும் உவமை கூறுதல் உணர்க. அருநூல்-உணர்தற்கரிய நூல் என்க. கிளை-நூலின் உட்பகுதிகள்.

18-19: பலவுடம்பு............................துசுப்பே

     (இ-ள்) துடிஎனும் நுசுப்பு-பண்டு உடுக்கை என்று உவமிக்கப்படும் அவளது சிற்றிடை; பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர்-பலவாகிய உயிரினங்களின் உடல்களை அழிக்கின்ற சான்றோராற் பழிக்கப்பட்ட ஊன் உணவினையுடைய கீழ் மக்கள் மேற்கொண்ட; தவம் எனத் தோய்ந்தது-தவம் அறத் தோய்ந்தாற்போலத் தேய்ந்தது என்க.

     (வி-ம்.) ஊன் உணவினருடைய தவம் தேய்ந்தாற்போல இடைதேய்ந்தது என்றவாறு. பலவுடம்பு-மாவும் புள்ளும் ஆகிய பலவேறு உயிரினங்களின் உடம்புகள் என்க. ஊன் உண்பாரிடத்து அருள் இல்லை யாகவே தவமு இலதாயிற்று. இதனை,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்”

(திருக். 251)

எனவும்,