பக்கம் எண் :

மூலமும் உரையும்29



 
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு”                (திருக். 252)

எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க. சான்றோராற் பழிக்கப்படுதலின் பழிஊன் உணவு என்றார்.

 
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்”                (திருக். 258)

என ஊனுணவு பழிக்கப்படுதல் உணர்க.

20 - 21: கடவுள்...........................காட்டின

     (இ-ள்) குழலும் கொன்றை புறவு அகற்றி-அவள் கூந்தலும் தானும் நிறத்தால் தோற்கும்படி செய்து கொன்றைப் பழங்களை முல்லை நிலத்தினின்றும் அகற்றி; கடவுள் கூறார் உளம் என-இறைவனை நினைந்து வாழ்த்தாத மடவோருடைய நெஞ்சத்தின்கண் நிலபெற்ற அறியாமை இருளை ஒத்த; நின்ற இருள் காட்டின-நிலபெற்ற இருளைத் தம்பாற் காட்டின என்க.

     (வி-ம்.) பண்டு நிறத்தால் கொன்றைப் பழத்தை வென்ற கூந்தல் இப்பொழுது மடவோருடைய நெஞ்சம்போல இருண்டு தோன்றிற்று என்பது கருத்து. எனவே தலைவியின் கூந்தல் பருவ முதிர்ச்சியால் மிகவும் கருமையுடைத்தாயிற்று என்றவாறு. அறியாமை இருள் எனப்படுதலின் அதனையே ஈண்டு உவமையாக்கினார். இது பன்புவமை; “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து” என்புழிப்போல, கொன்றை புறவகற்றி என்றது தற்குறிப்பேற்றம். கூந்தலை ஐம்பால் என்பது பற்றி இருள் காட்டின எனப் பன்மையாற் கூறினர். புறவிருள் கதிரவனுக்கு அழிதல்போல இக்கூந்தல் இருள் அழியாது நிலை நிற்றலின் நின்ற இருள் என்றார்.

22-23: சுரும்பு............................மலரே

     (இ-ள்) கண் இணை மலர்-பெருமானே கண்களாகிய இரண்டு மலர்களும்; சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர்போல-வண்டுகள் மொய்த்துத் தேன் பருகுவதற்கு இடமான ஆம்பல் மலர் போன்று; கறுத்துச் செவந்தன-கறுத்துச் சிவப்பெய்தின என்க.

     (வி-ம்.) இயற்கையிலேயே கறுப்பும் சிவப்புமுடைய கஃண்கள் இப்பொழுது மிகவு கறுத்து மிகவும் சிவந்தன என்றவாறு. சுரும்பு-வண்டுகள். தலைவியின் கண்கள் பண்டுபோல் வெள்ளை நோக்கு உடைய ஆகாமல் காமக்குறிப்புடையன ஆயின என்பாள், வாளா கழுநீர் என்னாது சுரும்பு படிந்துண்ணும் கழுநீர் என்று உவமைக்கு அடை புணர்ந்தாள்: என்னை? இப்பொழுது காதலன் கண்கள் அவள் கண்ணின்கட் காமக்குறிப்பினை நுகர்தல் உண்மையின் என்க. கறுத்துச் செவந்தன என்புழிச் செய்யுளின்பமுணர்க.