|
ஓதி நெய் முதலியன பெய்யப்பட்ட
அவ்வேள்விக் குழி; வயிறு வருந்தி முன்பின் ஈன்ற-வயிறுளைந்து தன் வலிமையினாலே ஈன்றுவிட்ட;
பேழ்வாய் புலியினை-பெரிய வாயினையுடைய புலியையும்; கைதைமுள் செறித்த கூர் எயிற்று
அரவினை-தாழையின் முட்களைச் செறித்து வைத்தாற் போன்ற கூர்த்த பற்களையுடைய பாம்பினையும்;
கார் உடல் பெற்ற தீவிழிக் குறளினை-கரிய உடம்பினையும் தீக்காலும் விழிகலையும்
படைத்துள்ள முயலகன் என்னும் பூதத்தினை என்க.
(வி-ம்.)
மூரி-நெரிவு; பருமையுமாம். வீழ்தல்-ஈண்டுத் திரளுதல். நெறி-அறல். முனிவர்-தாருகவனத்து
இருடிகள். தழல்குழி-ஓமகுண்டம். சருக்கம்-ஒரு நூலுறுப்பு. முன்பு-வலிமை. தாருகவனத்து இருடிகள்
சிவபெருமானிடத்துப் பகைத்துக்கொண்டு அவரை அழித்தற்பொருட்டு அபிசாரயாகம் செய்து
அவ்வேள்வித் தீயினின்றும் புலி, பாம்பு, பூதம் முதலியவற்றைத் தோற்றுவித்து விடுப்ப
என்பது கருத்து.
18-20:
உரி...............................நாயகன்
(இ-ள்)
உரிசெய்து உடுத்து-உரித்துத் தோலைப்போர்த்தும்; செங்கரம் தரித்து-சிவந்த கையிலே
அணிந்தும் செம்மலர் பழித்த தாள்கீழ் கிடத்தி-செந்தாமரை மலரைப் பழித்தற்குக்
காரணமான திருவடிகளின் கீழே கிடத்தியும்; அரும் நடம் புரிந்த தேவர் நாயகன்-திருவருட்கூத்தியற்றிய
தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் என்க.
(வி-ம்.)
புலியினை உரித்து உடுத்தும், அரவினைக் கரத்திற்றரித்தும் குறளினைத் தாள்கீழ் கிடத்தியும்
நடம்புரிந்த நாயகன் என்க.
21-25:
ஒருநாள்..........................மகளிர்
(இ-ள்)
ஒருநாள் மூன்றுபுரம் தீக்கொளுவ-பண்டொரு காலத்தே முப்புரத்தைத் தீயிட்டெரித்தற்
பொருட்டு; பொன்மலை பிடுங்கிக் கார்முகம் என்ன வளைத்த ஞான்று-வானத்தைத் தாங்கும்
பொன்மலையாகிய மேருவினைப் பறித்தெடுத்து வில்லாக வளைத்தபொழுது முன்னம் அம்மலையாற்
றாங்கப்பட்ட; நெடுவிண் தடை- நெடிய வானம் வீழ்ந்துவிடாமல் தடுத்தற் பொருட்டு; கால்
கொடுத்தன்ன-தூண்களை நாட்டினாற்போல; கந்திகள் நிமிர்ந்து நெருக்கு பொழில்-கமுகுகள்
வான்முட்ட வளர்ந்து நெருங்கி நிற்றலையுடைய சோலையையுடைய; கூடல் அன்ன செம்மகளிர்-மதுரைமா
நகரத்தை யொத்த சிறப்பினையுடைய செவ்விய மகளிர்களுடைய என்க.
(வி-ம்.)
ஒருநாள் என்றது பண்டொரு காலத்தே என்பதுபட நின்றது. அண்டத்தை தாங்கி நின்ற பொன்மலையைப்
பிடுங்கி
|