|
14-20: பொன்.......................கோட்டமும்
(இ-ள்)
பொன் அம் தோகையும்-பொன்னாலியன்ற ஆடையும்; மணி அரி சிலம்பும்-மாணிக்கப் பரல்களையுடைய
சிலம்பும்; நிரைத்தலைச் சுடிகை-நிரையான தலைச் சுடிகையிலுள்ள; நெருப்பு உமிழ் ஆரமும்-தீப்போன்ற
ஒளியை வீசுகின்ற கவுத்துவ மணிமாலையும்; வண்டுகிளை முரற்றிய-வண்டுகள் கைக்கிளை என்னும்
பண்ணைப் பாடுதற்கிடனான; பாசிலை துளவும்-பச்சிலையாகிய துழாய் மாலையும்; மரகதம்
உடற்றிய வடிவொடு மயங்க-மரகதமணியின் நிறத்தைக் கெடுத்த தன் திருமேனியோடு தலை
மயங்கும்படி; மரக்கால் ஆடி-மரக்கால் என்னும் கூத்தினை ஆடியருளி; அரக்கர் கொன்ற-அசுரர்களைக்
கொன்றொழித்த; கவைதலை மணிவேல் பிறைதலை கன்னி-கவைத்த தலையினையுடைய அழகிய சூலப்படையினை
ஏந்தி இளம் பிறையினைத் தலையிலே சூட்டியருளிய கன்னியாகிய கொற்றவை; பரிந்த வடபால்
பலிமண கோட்டமும்-விரும்பி எழுந்தருளிய வடதிசைக் கண்ணதாகிய ஊன் மணங்கமழும் திருக்கோயிலும்
என்க.
(வி-ம்.)
தோகை-ஈண்டு ஆடை. அரி-பரல். தலைச்சுடிகை-ஒருவகை யணிகலன். கிளை-கைக்கிளை என்பதன்
முதற்குறை. அஃதாவது ஒருவகைப் பண். துளவு-திருத்துழாய். உடற்றிய: உவமவுருபு. மரக்கால்-பதினொருவகை
கூத்தினிளொன்று; அஃதாவது அவுணர் வஞ்சத்தால் வெல்லுதல் கருதிப் பாம்பு தேள் முதலியனவாக
உருக்கொண்டு வருதலையுணர்ந்த கொற்றவை அவற்றை அழித்தற் பொருட்டு மரத்தாலாகிய காலைக்கொண்டு
நின்று ஆடிய கூத்து என்க. இடனை மாயவள் ஆடல் மரக்கால் அதற் குறுப்பு, நாமவகை யிற்சொலுங்கா
னான்கு எனவரும் அடியார்க்கு நல்லார் மேற்கோளானும் (சிலப். 3. 14. உரை) இன்னும்,
ஆய்பொன் னிரிச்சிலம்புஞ்
சூடகமு
மேகலையு மார்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல்
வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல்
வாளமலை யாடுமாயிற்
காயா மலர்மேனி யேத்தி வானோர் கைபெய்
மலர்மாரி காட்டும் போலும் (சிலப்.
2. 12. 12.) |
எனவரும் சிலப்பதிகாரத்தானும்
உணர்க. இனி பொன்னந் தோகையும்...--கோடமும் என்னுந் துணையும் வரும் அடைமொழிகள்
கொற்றவைக்கு உரியனவாகவும் இவற்றைத் திருமாலுக்குரியனவாகக் கருதிப் பழைய உரையாசிரியர்
பொன்னந் தோகை.....வடிவொடு மயங்க என்னுந் துணையும் பிரித்துக் கொடுபோய் வாளா
திருமாலுக்கு
|