பக்கம் எண் :

மூலமும் உரையும்341



திரளை; ஏழ் இடம் தோன்றி-ஏழிடங்கள் உயர்ந்து காணப்பெற்று; இனன்நூற்கு இயைந்து-குதிரைக் கூட்டத்திற்கு இலக்கனம் கூறும் நூல்விதிக்குப் பொருந்தி; வீதிபோகிய வால் உளைப்புரவி ஆக்கிய-மதுரைமா நகரத்தின் வீதியிலே செல்லும் வெள்ளிய பிடரிமயிரையுடைய குதிரைகளாக்கிய; விஞ்சைப் பிறைமுடி அந்தனன்-வித்தையினையுடைய பிறையினையுடைய முடியினையுடைய அந்தணனாகிய என்க.

     (வி-ம்.) வெடிவால்-பாறிய மயிரையுடைய வால். வீதி-மதுரைமா நகரத்து வீதி என்க. வால்-வென்மை. உளை-பிடரிமயிர். விஞ்சை-வித்தை. அந்தணன்-இறைவன.் “அறவாழி அந்தணன்” எனத் திருவள்ளுவரும் ஓதுதல் காண்க. இன்னூற்கியைந்து என்புழி இருநூற்கியைந்து எனவும் பாடம் உண்டு.

17-26: கொண்டோற்...........................எதிர்கொள்ள

     (இ-ள்) அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர்-தாய்வீட்டின்கண் ணிருக்கின்ற அழகும் மடப்பமுமுடைய மகளிர்கள்; கொண்டோற்கு ஏகும் குறிஉடை நன்னாள்-தம்மை மணந்த கணவன் வீட்டிர்குச் செல்லுதற்கெனக் குறித்த குறிப்புடைய நல்ல நாளிலே; கண்டன கவரும் காட்சிபோல-தாயில்லத்தே தாம் கண்டகண்ட பொருள்களை யெல்லாம் கவர்ந்துகொண்டு செல்லுகின்ற தோற்றத்தைப்போல; வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய-மழை பெய்தலைக் குறித்து வெறியாட்டாளன் வாழ்த்தி ஆடு பலியிட்டுப் பூசனைசெய்த; காலங் கோடோ-காலம் மாறுபடாமல்; வரைவளர் பண்டம்-மலையிற்றோன்றுகின்ற பொருள்களுள் வைத்து; வருவன வாரி-வருவனவற்றை யெல்லாம் வாரிக்கொண்டு; வண்டு இனம் தொடர-வண்டுக் கூட்டங்கள் தன்னைப் பின்தொடர்ந்து வாரா நிற்ப; கயல்கண் விழித்து-கயல் மீன்களாகிய தன் கண்களை விழித்து; பூதுகில் மூடி-மலர்களாகிய ஆடையால் திருமேனியை மூடிக்கொண்டு; குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து-குற மகளிரும் இடை மகளிரும் தன்பின்னே வந்து வழிவிடா நிற்ப நிரலே குறிஞ்சி நிலத்தினையும் முல்லை நிலத்தினையும் நடந்து கடந்து; கருங்கால் மள்ளர் உழவச்சேடியர்-கரிய காலையுடைய உழவர்களும் உழத்தியராகிய தோழிமாரும்; நிரைநிரை வனங்கி மதகு எதிர்கொள்ள-முறைமுறையாக வணங்கி மதகுதொறும் வந்து தன்னை எதிர்கொள்ளா நிற்பவும் என்க.

     (வி-ம்.) அணியும் மடமும் உடைய மங்கையர் என்க. கொண்டோர்க்கு-கணவன் இல்லிற்கு என்க. கணவன் வீட்டிற்குச் செல்லுதற்கு நன்னாள் கோடல் மரபாகலின் குறியுடை நன்னாள் என்றார். கண்டன-தாம் சிறப்பாகக் கண்ட பொருள்களையெல்