பக்கம் எண் :

342கல்லாடம்[செய்யுள்42]



லாம் என்க. தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மகளிர் தாய்வீட்டில் உள்ள சிறந்த பொருள்களை யெல்லாம் கவர்ந்து கொண்டுபொதல் இயல்பாதல் உணர்ந்து கொள்க. வேலன்-வெறியாட்டாளன். பேசுதல்-ஈண்டு வாழ்த்துதல் என்பதுபட நின்றது. மறி-ஆடு. செகுத்தல்-கொல்லுதல். மழையை வேண்டி வேலன் முருகனை வெறியாட்டெடுத்து வழிபட்ட பொழுதே அக்காலந் தவறாமல் மழை பொழியப்பட்டு வையையில் வெள்ளம் வரும் என்பது கருத்து. வரைவளர் பண்டம்-மலையில் தோன்று பொருள்கள் அவையாவன: மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் என்பனவும் யானை வெண்க்டும், அகிலின் குப்பையும, மானமயிர்க் கவரியும், சந்தனக் குறையும், சிந்தூரக் கட்டியும், அரிதாரமும், ஏலவல்லியும், இருங்கறி வல்லியும், கூவைநூறும், தெங்கின் பழனும், தேமாங்கனியும், பலவின் பழங்களும், காயமும், கரும்பும், பூமலி கொடியும், கமுகின் செழுங்குலைத் தாறும், வாழைத்தாறும், பொன்னும், மணியும், பிறவும் என்க.குறிஞ்சி நிலமாகிய தன் பிறப்பிடத்திலிருந்து ஆங்குள்ள சிறந்த பொருள்களை வாரிக்கொண்டு கடலாகிய தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் வையை நதிக்குப் பிறந்த விட்டிலிருந்து ஆங்குள்ளவற்றைக் கவர்ந்து கொண்டு கணவன் வீட்டிற்குச் செல்லும் மகளிரை உவமமாக வெடுத்துக் கூறுதல் பெரிதும் இன்புறுத்தலுணர்க. கயல் கண் விழித்து என மாறுக. ஈண்டு,

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக்
 கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி”   (சிலப். கானல். 25)

எனவும், “வையை என்ற பொய்யாக் குலக்கொடி....புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்து” (சிலப். 13. 170. 3) எனவும் வரும் இளங்கோவடிகளார் மொழிகளையும் நினைக. குறிஞ்சி நிலத்தையும் முல்லை நிலத்தையும் கடந்து வருதலின் குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து என்றார். புதுப்புனலை உழவரும் உழத்திஅரும் வணங்கி வரவேற்றல் மபர்பு. மதகினைத் திறந்து ஊரினுள் விடுதலாலே மதகெதிர் கொள்ள என்றார்.

27-30: தண்ணடை...................போல

     (இ-ள்) தண்ணடை கணவன்-தண்ணிய நீரொழுக்கமுள்ள கடலாகிய தன் கணவனை; பண்புடன் புணரும்-கற்புடை மகளிர் குணத்தோடே புணருகின்ற; வையை மாமாது-வையை என்னும் பெரிய மகள்; மணத்துடன் சூழ்ந்த-மணக்கோலத்துடன் சூழப்பெற்ற; கூடல் பெருமான்-மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளினது; பொன்பிறை திருவடி-பொன்னிறத்தையும் மாறுபடுத்துகின்ற அழகிய அடிகளை; நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல-நெஞ்சத்தின்கண் நினையாத வஞ்சகர்களைப் போல என்க.

     (வி-ம்.) தண் அடை-குளிர்ந்த நீரடைகரை எனினுமாம். கணவன்-கடலாகிய கணவன் என்க. பண்பு,