பக்கம் எண் :

மூலமும் உரையும்343



“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
 மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
 விருந்துபுறத் தருதலும் சுற்றம் ஓம்பலும்”            (தொல். 1098)

பிறவும் ஆம்.

31-34: சலியா......................கொடிக்கே

     (இ-ள்) சலியாச் சார்பு-ஒருகாலும் சலித்தலில்லாத ஆதரவு; நிலையிற நீங்கி-நிலைகெடச் சென்று; அரந்தையுற்று நீடநின்று இரங்கும்-துன்பங்கொண்டு ஒழிவற நின்று வருந்தா நின்ற; முருந்து எயிற்று இளம்பிறை கோலம் திருந்திய-மயிலிறகின் அடிப்பகுதியினை யொத்த பற்களையும் இளம்பிறை போன்ற தலைக்கோலத்தால் திருத்தமுற்ற; திருநுதல்-அழகிய நெற்றிய்னையுடைய; இளந்துகிர் கொடிக்கு-இளமையான பவளக்கொடி போன்ற எம்பெருமாட்டியின் திறத்திலே என்க.

     (வி-ம்.) சலியாச் சார்பு-நீங்காத ஆதரவு. அரந்தை-துன்பம். முருந்து-மயில் இறகின் அடிப்பகுதி. இளம்பிறைக் கோலம்-இளம்பிறை வடிவிற்றாகிய ஒருவகைத் தலைக்கோலம். துகிர்-பவளம்.

1-3: ஈன்ற.........................பிடி

     (இ-ள்) ஈன்ற செஞ்சூழல்-தன் தாய் தன்னை ஈன்ற செவ்விய சூழலினின்றும்; கவர்வழி பிழைத்த-கவர்த்த வழியிலே ஓடி வழி தவறிப்போன; வெறிவழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை-வெறித்த விழியினையும் செதும்புடைய கொம்பினையுமுடைய காட்டுப் பசுவினது கன்றை; மெல்நடை குழை செவி-மெல்லிய நடையினையும் குழைந்த செவிகளையும்; பெறாவெறுங் கரும்பிடி-நன்குபெறாத வறிய கரிய பெண்யானை என்க.

     (வி-ம்.) தாய் தன்னை ஈன்ற தாய் என்க. கவர்வழி-கிளைவழி. பிழைத்தல்-வழிதவறிப் பொதல். ஆமான்-காட்டுப் பசு. பருவமெய்தாத பெண் யானை என்பார் வெறுங் கரும்பிடி என்றார்.

4-9: கணி...........................நாடன்

     (இ-ள்) கணிப்பணைக் கவட்டும்-வேங்கை மரத்தின் பரிய கிளையினும்; மணல்சுனை புறத்தும்-மணலையுடைய சுனையின் பக்கத்திலும்; தழைகுற மங்கையர் ஐவனம் துவைக்கும் உரல்குழி நிறைந்த கல்அறை பரப்பும்-தழைகளை யுடுக்குங் குறமகளிர் மலைநெல்லை யிடிக்கின்ற உரலாகிய குழிகள் நெருங்கிய கற்பாறையை பரப்பினிடத்தும்; மானிட மாக்கள் அரக்கி கைப்பட்டென-மனிதருடைய மக்கள் அரக்கியின் கையில் அகப்பட்டாற்போல; நாமடிக்கும் சுவை உண-நாவை