பக்கம் எண் :

380கல்லாடம்[செய்யுள்48]



8 - 12: வாசவன் . . . . . . . . . . குன்றம்

     (இ-ள்) தென் கடல் நடு திடர் செய்து - தென்திசையின் கண்ணுள்ள கடலில் நடுவிடத்தைத் திடராக உயர்த்தி அதன் கண் நகர மமைத்துக் கொண்டு; உறைந்து- அதன்கணிருந்து கொண்டு; இமையவர் ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல்- தேவர்களுடைய நகரங்களை இடித்துக் கொள்ளை கொண்டுண்ணும் சூரபதுமன் என்னும் அசுரனுடைய உடலை; மூன்று எரி வாழ - அந்தணர் வளர்க்கும் மூன்று வகையான வேள்வித்தீயும் இடையூறின்றி வளரும் பெருட்டு; துணித்த மணிவேல் குமரன் - இரு கூறாக்கிய மணிபதித்த வேற்படையினை யேந்திய முருகக்கடவுள்; வாசவன் மகள் புணர்ந்து - தேவேந்திரன் மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரைத் திருமணம் புணர்ந்து; களிமகழ்செய்த - பெரிதும் மகிழ்ந்திருத்தற்கு இடனான; பேரருள் குன்றம் - மிக்க அருளை அடியார்க்கு வழங்கும் திருப்பரங்குன்றமானது என்க.

     (வி-ம்.) நடு - நடுவிடம். திடர் செய்தல் - மேடுறுத்துதல். இமையவர்- தேவர். உடைத்துக் கொள்ளைகொண்டுண்ணும் என்க. சூர் - சூரபதுமன். சூரபதுமன் அந்தணர் வேள்விக்கு இடையூறு செய்தலின் மூன்றெரி வாழ உடல் துணித்த என்றார். எரி வாழ எனவே அறங்கள் தழைக்க என்றாராயிற்று, மூன்றெரி - மூன்று வகைப்பட்ட வேள்வித் தீ அவையாவன: ஆகவநீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன. மணவேல் - மணி கட்டப்பட்ட வேலுமாம். அழகிய வேலுமாம். வாசவன்- தேவேந்திரன். களிமகிழ்: ஒரு பொருட் பன்மொழி, குன்றம் - திருப்பரங்குன்றம்.

12 - 14: ஒருபல் . . . . . . . . . . தேன்

     (இ-ள்) ஒரு பால் பொலிந்த அறப்பெருங்கூடல் - ஒரு திசையிலே விளங்கியுள்ள அறம் நிலைபெற்ற பெரிய மதுரை நகரத்திலே எழுந்தருளியுள்ள; பிறைச் சடைப்பெருமான் - பிறைத்திங்களணிந்த சடையினையுடைய சிவபெருமானுடைய; திருவடி பெருந்தேன் - அழகிய அடிகளாகிய மலர் வழங்கும் அருளாகிய மிகுந்த தேனை என்க.

     (வி-ம்.) அறக்கூடல், பெருங்கூடல் எனத் தனித்தனி கூட்டுக. திருவடிப்பெருந்தேன் - அழகிய அடிகளாகிய மலர் வழங்கும் அருளாகிய மிகுந்த தேனை என்க.

14 - 16: பருகுநர் . . . . . . . . . . கொடுத்தனன்

     (இ-ள்) பருகுநர் போல - பருகாநின்ற மெய்யடியார்களைப் போன்று; மணமுடன் பொதுளிய - நறு மணத்தோடே தளிர்த்துள்ள; வாடா மலர்தழை - வாடாத மலரோடு கூடிய