பக்கம் எண் :

மூலமும் உரையும்463



கடந்தது - இருவினை காரணமாக எல்லா உயிரிடத்தும் அமைக்கப்பட்ட ஊழ் முறைமையினும் மேம்பட்டது என்க.

     (வி-ம்.) அன்னவள் என்றது அங்ஙனம் நீ தவஞ்செய்து பெற்றெடுத்த அம்மகள் என்பதுபட நின்றது. மகளிர்க்குக் கற்பினும் சிறந்ததொன்றின்மையால் அதனையே முற்படக் கூறினாள். நின் கற்பையுங் கடந்தது என்க. நலனவள் என்றது அக்கற்பு நலமுடைய அவள் என்பதுபட நின்றது. பொறை - பொறாமை. கடல் மூழ்கி அரிபெறும் அருள் பெற்ற என்றது முன்பொருகாலத்தில் நிலம் கடலில் முழுகியபொழுது திருமால் பன்றியாகி அதனைக் கோட்டால் உயர்த்து நிலைநிறுத்தினான் என்னும் வரலாற்றினை உட்கொண்டது. இதனை,

"தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
றுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர் பிண்டி அவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்
நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமு நுதலிய
செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்(கு)
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வநிற் பேணுதுந் தொழுது"       (பரி. 2. 9-19)

எனவரும் பரிபாடலானும் உணர்க. நிலமகள் பொறுமையின் மிக்காள் என்பதனை,

"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
 யிகழ்வார்ப் பொறுத்த றலை"               (குறள். 151)

எனவரும் திருக்குறளானும் உணர்க். நிலமகள் பொறை என்க மதன் - மாண்பு. (பிங்கல) ஊழ் என்றது ஈண்டுப் பால்வரை தெய்வத்தை. அவள் வாய்மை தப்பாத வலிமையுடையது என்பாள் தப்பாத வலிமையுடைய ஊழினை உவமை எடுத்தாள். ஊழ் அங்ஙன மாதலை,

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
 சூழினுந் தான்முந் துறும்"                 (குறள். 310)

எனவரும் திருக்குறளானும் உணர்க. இனி ஊழ்தானும் அவளை வாய்மையினின்றும் பிறழச் செய்ய இயலாது என்றும் ஒரு பொருள் கொள்க.

10 - 13: கற்பகம்.................................... குடையே

     (இ-ள்) அன்னவள் இல்லம் - அவளது இல்வாழ்க்கையானது; கற்பகம் போலும் அற்புதம் பழுத்த நின் இலம்