பக்கம் எண் :

மூலமும் உரையும்465



தாயே! என் மகள் என்னினுங் காட்டில் சிறந்து விளங்குகின்றாள் என்றாளாயிற்று. இதுகாறும் கூறியவற்றால்,

"கற்புங் காமமு நற்பா லொழுக்கமு
 மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின்
 விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும்
 பிறவு மன்ன கிழவோண் மாண்புகள்"      (தொல். சூ. 152)

செவிலியால் நற்றாய்க் குணர்த்தப்பட்டமை உணர்க.

20 - 24: கொலை .......................................... கடந்து

     (இ-ள்) கொலைமதில் மூன்றும் - கொலைத்தொழில் செய்யும் முப்புரத்தையும்; இகல் அறக்கடந்து - பகை நீங்க வென்று; பெருநில எரித்த புகர்முகம் துளைக்க- மிகுந்த நிலாவொளியை வீசிய கொம்புகளையும் புள்ளிகளையுடைய முகத்தையும் துளையுடைய கையையும் உடைய; மதம்பொழி கறையடி - மதநீரைப் பொழிகின்ற யானையானது; அழிதர கடந்து - அழியும்படி வென்று; களவு தொழில்செய் அரிமகன் உடலம் - களவாகிய போர்த் தொழிலைப் புரிந்த காமவேளினது உடம்பானது; திருநுதல் நோக்கத்து எரிபெற கடந்து - அழகிய நெற்றிக் கண்ணினால் தீயுண்ணும்படி செய்து வென்று என்க.

     (வி-ம்.) கொலைமதில் - கொரைத்தொழிலையுடைய மதில். முப்புரம்- மதிலுருவாயித்தலின் அவற்றை மதில் என்றே கூறினர். இவை இரும்பு, பொன், வெள்ளி என்பவற்றால் இயன்றன. இதனை "இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசை அன்றோர், துரும்புறச் செற்றகொற் றத்தெம்பி ரான்தில்லைச் சூழ்பொழிற்கே" என வரும் திருக்கோவையாரானும் உணர்க. அழிதர : ஒருசொல். அரிமகன் - காமவேள். எரிபெற -தீயுண்ண.

25 - 30: மாறு................................. கடந்து

     (இ-ள்) மாறு கொண்டு அறையும்-ஒருவரோடொருவர் மாறுபட்டுக் கூறுகின்ற; மதிநூல் கடல்கிளர்-தம் அறிவானது நூலாகிய கடலை ஆராய்தலின் ஊக்கமிக்க; சமயக் கணக்கர்தம் திறம் கடந்து - சமயக்கணக்கர்களுடைய விகற்பங்களுக்கு அப்பாலாகி; புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த-ஐம்புலன்களோடு கூடி மய்ஙகாநின்ற பொய்யுடைய நெஞ்சத்தையுங் கடந்த; மலருடன் நிறைந்து வான்வழி கடக்கும் பொழில்நிறை கூடல் - மலர்களுடன் நிறைந்து வானவீதியையும் ஊடுருவிச் செல்லுகின்ற பொழில்களால் நிறைந்த மதுரையில் எழுந்தருளியுள்ள; புதுமதிச் சடையோன் - இளம்பிறையைத் தரித்த சடையையுடைய இறைவனுடைய; மன்நிலை-நிலைபெற்ற அருள்