பக்கம் எண் :

மூலமும் உரையும்585



விடத்தே ஒற்றை நரம்பாகிய மார்ச்சனையை அமைத்து; அ நரம்பு இருபத்தாறு அங்குலி பெற-அந்த நரம்பு இருபத்தாறு விரல் அளவுடையதாம்படி; இடக்கரம் துவக்கி-இடக்கையாற் கட்டி; இடக்கீழமைத்து-இடப்பக்கத்தே வைத்து; புறவிரல் மூன்றின்-மூன்று விரற்புறங்களானும்; நுனிவிரல் அகத்தும்-நுனிவிரலாலும்; அறுபத்து இரண்டு இசை-அறுபத்திரண்டு வகைப்பட்ட இன்னிசையை; அனைத் துயிர் வணங்கும்-எல்லா உயிராலும் வணங்கப்படுகின்ற; மருத்துவம் பெயர் பெறும்-மருத்துவயாழ் என்னும் பெயரையுடைய; வானக்கருவி-தேவயாழானது; தூங்கலும் துள்ளலும் துவக்கி நின்று இசைப்ப-தூங்கலோசையையும் துள்ளலோசையையும் தழுவி நின்று பாடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) தேவயாழ் வட்ட வடிவிற்றாய் முயலின் தோலாற் கட்டப்பட்டு நடுவிடத்தே ஒரு நரம்பினை இருபத்தாறு விரலளவுள்ள தாய்ப் பத்தரின்மேல் செங்குத்தாக நிறுத்தப்பட்ட தண்டில் கட்டி இடது பக்கத்தில் வைத்துக் கொண்டு வலக்கையின் மூன்று புறவிரல்களானும் நுனி விரல்களானும் வருடி இயக்கப்படும் என்பதும் அதன்கண் தூங்கலோசை துள்ளலோசை என்னும் இசை விகற்பங்களைத் தழுவி அறுபத்திரண்டு வகை இசை தோன்றும் என்பதும் இதனை மருத்துவயாழ் என்றும் கூறுப என்பதும் உணர்க.

30 - 35: நான்முகன்...........................வணங்காரென

     (இ-ள்) நான்முகன் முதலா மூவரும் போற்ற-நான்முகன் முதலிய மூன்று தேவர்களும் வாழ்த்தாநிற்ப; முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப-துறவோர் வணக்கத்தோடே முகமன் மொழிகளைக் கூறா நிற்ப; தேவர்கள் அனைவரும் திசை திசை இறைஞ்ச-முப்பத்து முக்கோடி தேவர்களும் திசைகள் தோறும் நின்று வணங்கா நிற்பவும்; இன்பப் பசுங்கொடி இடப்பால் படர-உயிர்கள் இன்புறுதற்குக் காரணமான பசிய பூங்கொடியை யொத்த பார்வதி தன்னிடப்பக்கத்தில் வீற்றிருப்ப; அம் வெள்ளிக்குன்றம் விளங்க வீற்றிருந்த-அழகிய வெள்ளிமலை தெய்வ ஒளியால் விளங்கும்படி எழுந்தருளியுள்ள; முன்னவன் கூடல்-முதல்வனாகிய சிவபெருமானுடைய மதுரை நகரத்தை; முறை வணங்கார் என-நூல் முறைப்படி வணங்காத மடவோரைப் போல என்க.

     (வி-ம்.) மூவர்-நான்முகன், திருமால், உருத்திரன் என்க. அஞ்சலி-வணக்கம். இன்பப் பசுங்கொடி-உயிர்கள் இன்புறுதற்குக் காரணமான பார்வதி. முன்னவன்-தலைவன். முறை-நூன்முறை.