பக்கம் எண் :

மூலமும் உரையும்645



12 - 19: சேவல்....................நிற்க

     (இ-ள்) சேவல் மண்டலித்து சினை அடை கிடக்கும் கைதை வெள்ளெருக்கு எழ-சேவலுடனே கூடி முட்டைகளை அடைகாக்கின்ற தாழத் தூற்றினின்றும் வெள்ளிய நாரை அஞ்சி மேலெழும்படி; மொய்திரை உகளும்-நெருங்கிய அலைகள் வீசுகின்ற; உளைகடல் சேர்ப்பன்-முழங்கா நின்ற கடற்றுறையையுடைய நம்பெருமான்; அளிவிடம் தணிப்ப-வழங்கிய நஞ்சு போன்ற துன்பத்தைத் தணிக்கும் பொருய்யு; நீலமுங் கருங்கொடி அடம்பும் சங்கமும்-கருங்குவளை மலரும் கரிய கொடியாகிய அடம்பும் சங்கும்; கண்ணிற்கு இடையின் களத்திற்கு அழிதந்து-எம்பெருமாட்டியின் கண்களுக்கும் இடைக்கும் கழுத்திற்கும் தோல்வியுற்று நாணி; அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அனுங்கலின்-விரிந்தும் வாடிஉலர்ந்தும் உடைந்தும் கெடுதலாலே; வட்குடை மையல் அகற்றி அன்பு ஒருகால் கூற்வௌம் பெறுமே-மழுக்கமுடைய தம் மயக்கத்தைவிட்டு அன்பால் ஒருமுறை நெம்பெருமான்பாற் சென்று இவள் மெலிவினைச் சொல்லவும் பெறுமோ? சொல்லமாட்டா; ஆரு அது நிற்க-அவ்வாறு அந்நினைவு ஒழிக இனி என்க.

     (வி-ம்.) மண்டலித்தல்-கூடுதல். சினை-முட்டை. கைதை-தாழை. குருகு-நாரை. குருகு எழ மொய்திரை உகளும் உளைகடற் சேர்ப்பன் என்றது நம்பெருமான் ஒருவழித் தணக்கும்படி அலரெழுகின்ற நம் மூர் என்பதுபட நின்றது. இதனால் அவர் உண்மையாகப் பிரிவாரல்லர், அலருக்கஞ்சியே யிருக்கின்றனர், இனி வந்து அளிசெய்வர் எனக் குறிப்பால் ஆற்றுவித்தபடியாம். விடம் என்றது துன்பத்திற்கு ஆகுபெயர். நீலமும் அடம்பும் சங்கமும் அவளுடனே பயிலுங் கேண்மையுடையன ஆயினும் அவளுடைய கண் முதலியவற்றிற்குத் தோற்று வருந்துதலின் அவை தூதுபோய்ச் சொல்லமாட்டா என்பது கருத்து. நீலம் கண்ணிற்கும் அடம்பங்கொடி இடைக்கும் சங்கம் கள்த்திற்கும் அழிந்தன. ஈண்டு நீலம் அலர்தலும் கொடி உலர்தலும் சங்கு உடைதலும் அவற்றிற்கு இயல்பாதல் உணர்க. வட்குதல்-மழுங்குதல். மையல்-மயக்கம். பெறுமே என்புழி ஏகாரம் எதிர்மறைப்பொருள் குறித்து வந்த வினா.

20 - 23: இவள்.........................கொடிதே

     (இ-ள்) இவள் நடை பெற்றும்-இவளுடைய நடையைக் கற்றும்; இவள் பயின்றும்-இவளோடு பயில்வுற்றும்; இரங்கியும்-இவள் நிலைமைக்கு இரங்கியும் (ஒலித்தும்); ஓருழி வளர்ந்த-இவளுடன் ஒரே இடத்தில் வளர்ந்த; நீர இ அன்னம்-நீர்மையையுடைய இந்த அன்னப் பறவைதானும் இத்துணைக் கேண்மை யுடையதாயிருந்தும்; அன்று என-