1
- 6: பெருநிலத்.....................................வாங்க
(இ-ள்)
பெருநிலத்தேவர்கள் மறைநீர் உகுப்ப - பெரிய நில உலகத்துத் தேவர்கள் என்னும் அற்தணர்
மறைமொழி கூறி நீர் இறைக்கவும் அவர் மகத்துள் வளர் அவி மாந்த - அவ்வந்தணருடைய
வேள்விக் களத்திலிடும் மிக்க அவியை உண்ணவும் விடையோன் அருச்சனைக்கு உரிமையின்
- சிவன் வழிபாட்டிற்கு உரிமையுடைமையால் முன்னவன் - முதல்வனாகி அன்னவன் தன்னுடன்
ஏழ்கடிகை அமர - அச்சிவ பெருமான் தன்னோடே ஏழுநாழிகை அளவும் பொருந்தா நிற்பவும்
அன்றியும் இமையாக் கண் எனல் காட்ட - அல்லாமலும் தான் அச்சிவபெருமானுடைய இமைத்தலில்லாத
கண்களில் ஒன்றாய் இருத்தலை உலகினர்க்குக் காட்டவும் ஆயிரம பண அடவி அரவு கடு வாங்க
- ஆயிரம் படங்களையுடைய பாம்பு நஞ்சினைக் கவர்ந்து கொள்ளவும் என்க,
(வி-ம்.) நிலத்தேவர்
- பார்ப்பனர்,இவரைப் பூசுரர் என்று வழங்கலும் காண்க, அந்தணர் விடியலில் மறையோதி
நீருகுத்தல் உண்மையின் அந்தணர் மறைநீருகுப்பவும் என்றார்,அவர் - அவ்வந்தணர்,மகம்
- வேள்விக் களம்.அவி -வேள்வித்தீயில் இடும் தேவருணவு, மாந்தல் - உண்ணல், விடையோன்
எருந்துார்தியாகிய சிவபெருமான், அவனுடைய எண்வகை வடிவங்களுள் ஓன்றுதலால் ஞாயிறு சிவவழிபாட்டிற்கு
உரிமையுடைய தாயிற்றென்க, விடியலில் ஏழுநாழிகையளவும் இறைவன் ஞாயிற்று மண்டிலத்தில்
அடியார் வழிபாட்டை ஏற்றுக்கொள்ளுதற்குப் பொருந்தியிருப்பன் என்பது கருத்து, அன்னவன்-
சிவபெருமான்,தன்னுடன் - ஞாயிறாகிய தன்னுடன் என்க, சிவபெருமானுடைய முக்கண்களுள் வைத்து
ஞாயிறு ஒரு கண் ஆதலின் கண்ணெனல் காட்ட என்றார்,நச்சுப்பாம்புகள் அனைத்தும் கதிரவனிடத்திருந்தே
நஞ்சு கொள்கின்றன, ஆயினும் சிறப்புக் கருதி ஆதிசேடனை ஈண்டுக் கூறிஞர்,ஆயிரம் பணாடவி
அரவு என்றது ஆதிசேடனை,
7
- 12: தேவர்.................................வாய்ப்ப
(இ-ள்) தேவர் உண்மருந்து
உடல் நீட நின்று உதவ தேவர்கள் உண்ணுகின்ற அமிழ்தம் அவர் உடலினில் நெடுங்காலம்
நிலைபெற்றிருந்து அவை அழியாமல் உதவும்படியும் உடல் முனி செருவினர் - தம் முடலை விரும்பாத
மறவர்கள் உடல் வழி நடப்ப - போர்க்களத்தின்கண் விழுப்புண் பட்டிறந்த பொழுது தன்
உடலினுாடாக மெனிலையுலகத்திற்குச் செல்லவும் நாரணன் முதல் சூடத தேவர் படைதோற்ற
- திருமால் முதலிய தேவர்களின் சக்கரப்படையின் உருவத்தைக் கண்கூடாகக் காட்டவும்
தண்மதி கலைகள் அற ஓடங்க - குளிர்ந்த திங்களின் கலைகள் முழுவதும் தன் பால் ஓடுங்கவும்
எரிந்து எழும் அரக்கர்
|