பக்கம் எண் :

மூலமும் உரையும்663



ஏனையும் மடிய -சினந்தெழாநின்ற அரக்கர்களும் பிறருமாகிய தீயோர் மாளவும் மறையவன் குண்டம் முறை முறை வாய்ப்ப - பிரமனுடைய வேள்வித்தொழில் விதிமுறைப்படி நடப்பவும் என்க.

     (வி-ம்.) மருந்து - அமிழ்தம், உடல் முனி செருவினர் என்றது மறவர்களை, இவர் போர்க்களத்தில் இறந்தபொழுது ஞாயிற்று மண்டிலத்தின் ஊடாக மேனிலையுலகம் செல்வர் என்பது பற்றிச் செருவினர் உடல்வழி நடப்ப என்றார், சக்கரப்படையுடையோரில் திருமாலே சிறந்தவன் ஆதலின் நாரணன் முதலாம் தேவர் படைதோற்ற என்றார், தோற்ற பிறவினை தண்மதி - திங்கள்மண்டிலம், தான் அசை, அற ஓடுங்குதல் - முழுதும் மறைதல், அரக்கர் ஏனையர் என்றது அரக்கரும் பிறருமாகிய தீயோர் என்றவாறு, மறையவன்- பிரமன், குண்டம் ஆகுபெயர்,

13 - 18: அவன்.......................................பாடி

     (இ-ள்) அவன் தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க - அப்பிரமனால் படைக்கப்பட்ட உலகங்களிலே செயற்கருந் தொழில்கள் எல்லாம் வளரவும் பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற ஓருகால் தேர் நிறைந்து - பசிய உடலும் பிடரிமயிருமுடைய ஏழு குதிரைகளால் அழகு பெற்று ஒற்றை உருளையையுடைய தேரின்கண் அமர்ந்து விண்ணெலாம் நிறைந்து,இருள் உடைத்து எழுந்த செங்கதிர் -இருளைக் கிழித்துத் தோன்றின சிவந்த கதிரவன்,விரித்த செந்திருத் தாமரைமலர் பெருந்தேன் அருந்தி - மலர்த்திய செவ்விய திருமகளுக்கிடமாகிய தாமரை மலரிடத்து மிக்க தேனைப் பருகி எப்பேரிசை அனைத்தினும் முதலிசைச் செவ்வழி விதி பெறப் பாடி - எத்தகைய பேரிசைகளுக்கும் முற்பட்ட இசையாகிய செவ்வழிப் பண்ணை முறையாகப் பாடி என்க,

     (வி-ம்.) அவன் - அப்பிரமன், அருந்தொழில் என்றது தவ முதலியவற்றை உளை - பிடரிமயிர், மா - குதிரை, கால் - உருளை,செங்கதிர் - ஞாயிறு. திருமகட்கு இருக்கையாகலின் செந்திருத் தாமரை மலர் என்றார், செவ்வழி விடியற்காலத்தே பாடும் பண்ணாகலின் எத்தகைய பேரிசைக்கும் முதலிசை என்றார்,

18 - 23: அத்தாது......................................ஊர

     (இ-ள்) அ தாது உடல் துதைந்த மெல்தழைசிறை வண்டு இனம் - அந்தத் தாமரைப்பூந்துகளைத் தமதுடலிற்றிமிர்ந்து கொண்ட மெல்லிய தளிர் போன்ற சிறகிளையுடைய வண்டுக்கூட்டம், பசுந்தாள் புல்லிதழ் கருந்தாள் ஆம்பல் உவா சிறிது மதுவமும் குறை பெற அருந்தி - பசிய தாளினையும் பசிய புறவிதழையும் உடைய அல்லி மலரினும் கரிய தாளையுடைய