பக்கம் எண் :

634சித்தாந்த சாத்திரம்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருவதிகை - மனவாசகங்கடந்தார்

அருளிச்செய்த

உண்மை விளக்கம்

மூலமும் உரையும்1

-----

காப்பு

உண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்.

     (உரை) வண்மை.......உரை செய்ய - வளப்பத்தைத் தருகின்ற ஆகம
நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய
முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற்
பொருட்டும், - பந்தம் அற - பாசங்கள் நீங்குதற்பொருட்டும், - திண்மதம்...
ஐங்கரனை - செக்கர்வானம்போன்ற திருமேனியினையும் யானை
முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக்
கடவுளை, - புந்தியுள் வைப்பாம் - சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.

நூல்

பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா

     1. குறிப்பு :- இந்நூலாசிரியர் மெய்கண்டதேவருடைய மாணாக்கருள்
ஒருவர். இவரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் கிடைத்தில. இந்நூலுக்கு
இப்பதவுரையும் வேறொரு பொழிப்புரையும் உண்டு. உரையாசிரியர்கள்
பெயர் பிரதிகளில் துலங்கவில்லை.