பக்கம் எண் :

உண்மை விளக்கம்635


மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினா
ஐயாநீ தான்கேட் டருள்.                1

     (உரை) பொய் காட்டி...மெய்கண்டாய் - பக்குவர்க்குத் தேகாதிப்
பிரபஞ்சத்தைப் பொய்யென விளக்கி, அப்பொய்யை நீக்கி, அறிவிலே
ஆனந்தசொரூபமாயிருக்கிற உண்மையை விளக்கும் மெய்கண்டநாதனே, -
பொய்காட்டா...வித்தகா - அபக்குவர்க்குப் பொய்யை விளக்காத சத்தியத்தை
யுடையவனே, திருவெண்ணெய்நல்லூரிலே எழுந்தருளியிருக்கின்ற ஞானா
சாரியனே, - ஐயா...ஐயனே, - சுத்தவினா விண்ணப்பம் நீதான் கேட்டருள் -
அடியேனது சுத்த வினாவாகிய விண்ணப்பத்தினை நீ திருச்செவி
சாத்தியருளவேண்டும்.                                          1

ஆறாறு தத்துவமே தாணவமே தன்றேதான்
மாறா வினையேது மற்றிவற்றின் - வேறாகா
நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தானேது தேசிகனே சாற்று.             2

     (உரை) ஆறாறு தத்துவம் ஏது - முப்பத்தாறு தத்துவம்யாது, - அன்றே
தான் மாறா ஆணவம் ஏது - அநாதியே விட்டு நீங்காத ஆணவ மலம் யாது,
- வினை ஏது - வினை யாது, - மற்று இவற்றின் வேறாகா நான் ஏது -
இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது,
- நீ ஏது - உன்னுடைய சொரூபம் யாது, - நாதன் நடம் (ஏது) -
பரமேசுவரனுடைய திருநடம் யாது, - அஞ்செழுத்துத் தான் ஏது -
பஞ்சாக்கரத்தின் உண்மை யாது, - தேசிகனே சாற்று - குருமூர்த்தியே நீ
அருளவேண்டும்.                                              2

உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உன்றனக்கு
வள்ளல்அரு ளால்அன்று வாய்மலர்ந்து - தெள்ளியசீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ்புதல்வா உற்று.                  3

     (உரை) ஆனந்தயோகம் நிகழ் புதல்வா - விளங்குகின்ற ஆனந்த
யோகத்திலே (அடங்கிநிற்கும்) மாணவகனே, - வள்ளல் அருளால் அன்று
வாய்மலர்ந்து சொன்ன சீர் ஆகமங்கள் உள்ளபடி தெள்ளிய