குறிகுலிசம் கோகநதம் கொள்சுவத்தி குன்றா அறுபுள்ளி ஆரமுத விந்துப் - பிறிவின்றி மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேயென்(று) ஒண்புதல்வா ஆகமம் ஓதும் 6 | (உரை) ஒண் புதல்வா - நல்ல மாணவகனே, - மண் புனல் தீ கால் வானம் - பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் ஆகிய இவற்றிற்கு, - அடைவே - முறையே, - குறி குலிசம் கோகநதம் கொள் சுவத்திகுன்றா அறுபுள்ளி ஆர் அமுத விந்து - அடையாளம் வச்சிரமும் தாமரைப்பூவும் பொருந்திய சுவத்திகமும் குறையாத அறுபுள்ளியும் பொருந்திய அமுத விந்துவும், - பிறிவின்றி மன்னும் என்று ஆகமம் ஓதும் - நீங்காது நிலைபெறுமென்று சிவாகமஞ் செப்பும். 6 பாராதி ஐந்துக்கும் பன்னும்அதி தெய்வங்கள் ஆரார் அயனாதி ஐவராம் - ஓரோர் தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும் பழுதறவே பண்ணுவர்காண் பார் 7 | (உரை) பாராதி ஐந்துக்கும் பன்னும் அதிதெய்வங்கள் ஆர் ஆர் - பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஐந்துக்குஞ் சொல்லப்பட்ட அதி தேவதைகள் பொருந்திய யாவர் எனின், - அயனாதி ஐவராம் - முறையே பிரமாவும் விஷ்ணுவும் உருத்திரரும் மகேசுவரரும் சதாசிவரும் என ஐந்து பேராம், - சொல்லுங்கால் அவர்க்கு ஓரோர் தொழில் - சொல்லுமிடத்து அவருக்கு ஒவ்வொரு தொழிலேயாம், - தோற்றம் முதல் ஐந்தும் பழுது அறவே பண்ணுவர் காண் பார் - அவர் சிருஷ்டி திதி சங்காரந் திரோபவம் அநுக்கிரகமாகிய ஐந்தும் குற்றமறச் செய்வார்களென்று அறிவாயாக. 7 படைப்பன் அயன்அளிப்பன் பங்கயக்கண் மாயன் துடைப்பன் உருத்திரனும் சொல்லில் - திடப்பெறவே என்றுந் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும் அன்றே அநுக்கிரக ராம். 8 | (உரை) அயன் படைப்பன் - பிரமா சிருஷ்டிப்பன், - பங்கயக்கண் மாயன் அளிப்பன் - செந்தாமரைமலர்போலுங் கண்ணையுடைய |