பக்கம் எண் :

உண்மை விளக்கம்639


ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம்
சத்தாதி யைஅறியும் தானம் செவிதோல்கண்
அத்தாலு மூக்கென் றறி.              11

     (உரை) ஞானேந்திரியங்கள் நன்றா உரைக்கக்கேள் - ஞானேந்திரி
யங்களை நன்றாகச் சொல்லுகிறோங் கேள், - ஊனம் உற்று மிகு பூதம்
இடமா - குறைவு பொருந்தி மிகுகின்ற பஞ்சபூதங்களிடமாக நின்று, -
ஈனமாஞ் சத்தாதியை அறியும் - அவை தாழ்வாகிய சத்தாதி விடயங்களை
அறியும், - தானம் செவி தோல் கண் அத்தாலு மூக்கென்று அறி -
அவற்றிற்குத் தானம் சுரோத்திரம் துவக்கு சட்சு அந்தச் சிகுவை
ஆக்கிராணமென்று அறிவாய்.                                  11

வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதனை
ஈனமிகுந் தோல்கால் இடமாக - ஊனப்
பரிசம் தனைஅறியும் பார்வையிற்கண் அங்கி
விரவிஉரு வங்காணு மே               12

     (உரை) வானிடமா நின்று செவி மன்னும் ஒலியதனை அறியும் -
ஆகாயத்தினிடமாக நின்று சுரோத்திரம் பொருந்திய சத்தத்தை யறியும், -
கால் இடமாக நின்று ஈனமிகுந் தோல் ஊனப் பரிசம் தனை அறியும் -
வாயுவினிடமாக நின்று ஈனத்துவமிக்க தொக்கு குறைவுடைய பரிசத்தை
யறியும், - அங்கி விரவிப் பார்வையிற் கண் உருவங் காணுமே -
தேயுவினிடமாக நின்று பார்வையினையுடைய சட்சு உருவத்தை யறியும்.  12

நன்றாக நீரிடமா நாஇரதந் தான்அறியும்
பொன்றா மணம்மூக்குப் பூவிடமா - நின்றறியும்
என்றோது மன்றே இறைஆ கமம்இதனை
வென்றார்சென் றாரின்ப வீடு.            13

     (உரை) நன்றாக நீரிடமா (நின்று) நா இரதந்தான் அறியும் -
நன்மையாக அப்புவினிடமாக நின்று சிகுவை இரசத்தையறியும், - பொன்றாப்
பூவிடமா நின்று மூக்கு மணம் அறியும் - கெடாத பிருதிவியினிடமாகநின்று
ஆக்கிராணங் கந்தத்தை யறியும், - என்று