பக்கம் எண் :

640சித்தாந்த சாத்திரம்

இறை ஆகமம் அன்றே ஓதும் - என்று சிவாகமங்களிலே அநாதியே
சொல்லும், - இதனை வென்றார் இன்ப வீடு சென்றார் - இந்தப்
பஞ்சேந்திரியங்களை நிக்கிரகம் பண்ணினவர்களே ஆனந்த வீட்டினை
அடைந்தார்.                                                13

கண்ணுதல்நூ லோதியிடும் கன்மேந் திரியங்கள்
எண்ணும்வச னாதிக் கிடமாக - நண்ணியிடும்
வாக்குப்பா தம்பாணி மன்னு குதம்உபத்த
மாக்கருது நாளு மது.                  14

     (உரை) வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தமாக் கருதும்
கன்மேந்திரியங்கள் - வாக்குப் பாதம் பாணி பொருந்திய பாயு உபத்தமாகக்
கருதுகின்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், - எண்ணும் வசனாதிக்கு இடமாக
நாளுமது நண்ணியிடும் - மதிக்கின்ற வசனமும் கமனமும் தானமும்
விசர்க்கமும் ஆனந்தமுமாகி யவற்றிற்கு இடமாக நாடோறும் பொருந்தும்
என்று, - கண்ணுதல் நூல் ஓதியிடும் - சிவாகமம் செப்பும்.            14

வாக்காகா யம்இடமா வந்துவச னிக்குங்கால்
போக்காரும் காற்றிடமாப் புல்கிஅனல் - ஏற்கும்
இடுங்கை குதநீ ரிடமா மலாதி
விடும்பா ரிடம்உபத்தம் விந்து.            15

     (உரை) ஆகாயம் இடமா வாக்கு வந்து வசனிக்கும் - ஆகாய மிடமாக
நின்று வாக்குப்பொருந்தி வார்த்தை சொல்லும், - காற்று இடமாகக் கால்
போக்கு ஆரும் - வாயுவினிடமாக நின்று பாதம் கமனஞ் செய்யும், - அனல்
புல்கி கை இடும் ஏற்கும் - தேயுவினிடமாக நின்று பாணி இடுதல் ஏற்றல்
செய்யும், - நீரிடமாக்குதம் மலாதி விடும் - அப்புவினிடமாக நின்று பாயு
மலசலங்களைப் பிரித்தல் செய்யும், - பாரிடம் உபத்தம் விந்து விடும் -
பிருதிவியினிடமாக நின்று உபத்தம் விந்துவை விடுத்து ஆனந்தஞ்
செய்விக்கும்.                                                 15

அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்தையிவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர்.                 16