பக்கம் எண் :

உண்மை விளக்கம்641


     (உரை) அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள் - அந்தக்
கரணங்களை முறையே சொல்லக்கேள், - அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம்
சிந்தை இவை - அம்மனமும் புத்தியும் அகங்காரமும் சித்தமுமாகிய
இவையாம், - பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு உற்றது
சிந்திக்கும் உணர் - (அவற்றுள் மனம்) பற்றியதனை (புத்தி) நிச்சயித்து
(அகங்காரம்) பலமுறை (அபிமானித்து) எழுந்து (சித்தம்) அங்கே யுற்றதனைச்
சிந்திக்குமென்று அறிவாய்.                                      16

ஓதியிடும் நாலாறும் உற்றான்ம தத்துவமென்(று)
ஆதி அருள்நூல் அறையுங்காண் - தீதறவே
வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள்
உத்தமனே நன்றா உனக்கு.             17

     (உரை) ஓதியிடும் ... அறையுங்காண் - சொல்லப்பெற்ற இருபத்து
நாலும் பொருந்தி ஆன்ம தத்துவமாமென்று சிவாகமநூல் சொல்லும், -
உத்தமனே வித்தியாதத்துவங்கள் தம்மை உனக்கு தீது அறவே நன்றா
விளம்பக்கேள் - உத்தம மாணாக்கனே! வித்தியா தத்துவங்களை உனக்குக்
குற்றமற நன்றாகச் சொல்லக்கேளாய்.                              17

காலம் நியதி கருதும் கலைவித்தை
ஏலஇரா கம்புருட னேமாயை - மால்அறவே
சொன்னோம் அடைவாகச் சொன்னஇவை தன்னுண்மை
உன்னி உரைக்கும்நாம் உற்று.                  18

     (உரை) காலம் ... மாயை - காலமும் நியதியும் கருதுகின்ற கலையும்
வித்தையும் பொருந்த இராகமும் புருடனும் மாயையுமாம், - மால் அறவே
அடைவாகச் சொன்னோம் - (இவற்றை) மயக்கமற முறையாக (உனக்கு)ச்
சொன்னோம், - சொன்ன இவைதன் உண்மை உற்று உன்னி நாம் உரைக்கும்
- கூறிய இவற்றின் உண்மையை உற்றுநோக்கி (இனி) நாம் சொல்லுவோம்.  18

எல்லை பலம்புதுமை எப்போதும் நிச்சயித்தல்
அல்லல் தருங்கிரியை ஆன்மாவுக்(கு) - ஒல்லை
அறிவாசை ஐம்புலனும் ஆரவருங் காலம்
குறியா மயக்கென்று கொள்.               19