(உரை) எல்லை பலம் புதுமை - காலதத்துவமானது கழிகாலத் தெல்லையையும் நிகழ்காலத்துப் பலத்தையும் எதிர்காலத்துப் புதுமையையும் பொருத்துவிக்கும், - எப்போதும் நிச்சயித்தல் - நியதி தத்துவமானது எந்தக்காலமும் கன்மத்தை இவ்வளவென்று நிச்சயம் பண்ணி நிறுத்தும், - அல்லல் தருங் கிரியை - கலையானது ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவுக்குக் கிரியையை யெழுப்பும், - ஆன்மாவுக்கு ஒல்லை -வித்தியா தத்துவமானது ஆன்மாவுக்குச் சீக்கிரத்திலே அறிவை யெழுப்பும், - ஆசை - இராகதத்துவமானது பெற்ற பதார்த்தங்களைச் சிறிதாக்கிப் பெறாததிலே இச்சையை யுண்டாக்கும், - ஐம்புலனும் ஆரவருங் காலம் - ஆன்மா பஞ்சேந்திரியங்களிடமாகச் சத்தாதிவிடயங்களைப் புசிக்க வருகின்ற அவதரத்தில் புருடதத்துவமானது விடயத்திலே யழுத்துவிக்கும், - குறியா மயக்கென்று கொள் - மாயையானது ஒன்றை நினைக்கவொட்டாமல் மயக்கத்தைச் செய்யுமென்றறிவாயாக. 19 வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம் சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் - நித்தமாம் சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நற் சத்திசிவங் காண்அவைகள் தாம். 20 | (உரை) வித்தியா ... கேள் - வித்தியா தத்துவங்கள் ஏழுஞ் சொன்னோம், சுத்தமாயிருக்கிற சிவதத்துவங்கள் ஐந்தையுஞ் சொல்லுகிறோங் கேள், - நித்தமாம் ... தாம் - அவை நித்தியமாயிருக்கிற சுத்த வித்தை ஈசுரம் பின்கூறும் சாதாக்கியம் நன்மையாகிய சத்தி சிவம் என்றறிவாயாக. 20 சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான் அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் - ஒத்தல்இவை சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை ஆதார ஞானஉரு வாம். 21 | (உரை) சுத்தவித்தை ... ஆக்கியிடும் - சுத்தவித்தை ஞானமேறிக் கிரியை குறைந்திருக்கும், பழமையாகிய ஈசுவரதத்துவமானது சிவஞானங் குறைந்து கிரியையேறியிருக்கும், - சாதாக்கியம் |