பக்கம் எண் :

உண்மை விளக்கம்643


இவை ஒத்தல் - சாதாக்கிய தத்துவம் ஞானமுங் கிரியையும் ஒத்திருக்கும், -
என்றும் சத்தி கிரியை சிவம் ஆதார ஞான உருவாம் - எப்போதும் சத்தி
தத்துவம் கிரியையாயிருக்கும், சிவதத்துவம் ஆதார ஞானமாயிருக்கும்.   21

ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறில்
அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினையென்று கொள்.          22

     (உரை) ஆறாறு தத்துவமும் அடைவாகச் சொன்னோம் - முப்பத்தாறு
தத்துவங்களையும் முறையாகச் சொன்னோம், - மாறா மலம் இரண்டும்
சொல்ல வா - விட்டுநீங்காமலிருக்கின்ற ஆணவமலத்தையும் கன்ம
-மலத்தையும் சொல்லுகிறோங்கேள், - கூறில் அறியாமை ஆணவம் -
சொல்லுமிடத்து அறியாமையைப் பண்ணிக்கொண்டு நிற்பது ஆணவமலம், -
சுகதுக்கங் குறியா நீயான வினையென்று கொள் - சுகதுக்கமொன்றையும்
நினையாமல் நீ தானாயிருப்பது தானே கன்ம மலமென்றறிவாயாக.       22

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
மாறா அருளால் வகுத்துரைத்தீர் - வேறாகா
என்னை எனக்கறியக் காட்டீர் இவைகண்டேன்
உன்னரிய தேசிகரே உற்று.             23

     (உரை) உன்னரிய தேசிகரே - நினைத்தற்கரிய ஆசாரியரே, - ஆறாறு
தத்துவமும் - முப்பத்தாறு தத்துவத்தையும், - ஆணவமும் - ஆணவ
-மலத்தையும், - வல்வினையும் - வலிய கன்மமலத்தையும், - மாறா அருளால்
வகுத்து உரைத்தீர் - விட்டு நீங்காத கிருபையினாலே வகுத்தருளிச்செய்தீர்,
- இவை கண்டேன் - இம்மலங்களைத் தரிசித்தேன், - வேறாகா என்னை
எனக்கு அறியக் காட்டீர் [உற்று] - (இனி) இந்த மலங்களுக்கு வேறாகாமல்
ஒன்றுபட்டிருக்கின்ற என்னுடைய சொரூபத்தையும் [பொருந்தி] அருளிச்
செய்யவேண்டும்.                                               23

நன்றா உரைக்கக்கேள் நல்லசித்தின் முன்அசித்திங்(கு)
ஒன்றாது சித்தசித்தை ஓராது - நின்றிவற்றை