அன்றே பகுத்தறிவ தான்மாவே என்றுமறை குன்றாமல் ஓதுங் குறித்து. 24 | (உரை) நன்றா உரைக்கக் கேள் - நீ கேட்ட ஆன்மதரிசனத்தை நன்றாகச் சொல்லுகிறோங்கேள் ;- நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன்றாது - நல்லசித்தாகிய சிவத்தின்முன்னே அசித்தாகிய பாசம் நில்லாது, - சித்து அசித்தை ஓராது - சித்தாகிய சிவத்துக்கு அசித்தாகிய பாசத்தை அறியவேண்டுவதில்லை, - இவற்றை அன்றே நின்று பகுத்தறிவது ஆன்மாவே - சித்தாகிய சிவத்தையும் அசித்தாகிய பாசத்தையும் அநாதியிலே பொருந்தி விசாரித்தறிவது ஆன்மாவே, என்று மறை குன்றாமல் குறித்து ஓதும் - என்று சிவாகமங்களிலே குன்றாது சுட்டிச் சொல்லும். 24 தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்றறியா எத்தன்மை என்னில் இயம்பக்கேள் - சுத்தமாம் ஆறு சுவையும் அறியாது தன்னைத்தான் கூறில் அவைஇவைபோற் கொள். 25 | (உரை) தத்துவங்கள் ... கேள் - முப்பத்தாறு தத்துவங்களும் ஜடமாகையினாலே தம்முடைய சொரூபத்தைத் தாமறியா, எந்த முறைமை யென்று கேட்கிறாயானால் சொல்லுகிறோங்கேள், - சுத்தமாம் ... கொள் - சுத்தமாயிருக்கிற அறுவகைச்சுவையுந் தன்னுடைய சொரூபத்தைத் தானறியாது, சொல்லுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களுஞ் சுவைகளைப்போலத் தம்முடைய சொரூபத்தைத் தாமறியா. 25 ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை வேறொருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்றொன்றா நாடிஉணர்ந் தோதில்அதில் உற்றறிவாய் நின்றபொருள் தானேகாண் நீ. 26 | (உரை) ஆறு சுவையும் ... மேன்மைபோல் - அறுவகைச் சுவையும் புசித்துக் கைக்கிறது கார்க்கிறது கூர்க்கிறது துவர்க்கிறது புளிக்கிறது இனிக்கிறதெனக் கண்டுணர்ந்து ஒருவன் சொல்லுகிற முறைமைபோல, - ஆறாறும் ஒன்றொன்றா நாடி உணர்ந்து - முப்பத்தாறு |