பக்கம் எண் :

646சித்தாந்த சாத்திரம்

நில்லா இடத்துயிர்க்கு நில்லா தறிவென்று
நல்லா கமம்ஓதும் நாடு.            29

     (உரை) அக்கரங்கட்கெல்லாம் அகர உயிர் நின்றாற்போல் - ஏனைய
எல்லா அக்கரங்கட்கும் அகரமாகிய அக்கரம் உயிராய் நின்றது போல், -
மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் - சர்வான்மாக்களிடத்திலேயும் அறிவுக்
கறிவாய்ப் பொருந்தி நின்றோம், - எக்கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு
அறிவு நில்லாதென்று - சடசித்துக்களெல்லாவற்றினும் கார்த்தா நிறைந்து
நின்று அறிவித்தா லல்லது உயிர் அறியாதென்று, - நல்லாகமம் ஓதும் நாடு
- சிவாகமங்களிலே சொல்லுமென்று விசாரித்தறிவாயாக.               29

நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத் தஞ்செழுத்தால்
உற்றுருவாய் நின்றாடல் உள்ளபடி - பெற்றிடநான்
விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே
தண்ணார் அருளாலே சாற்று.                 30

     (உரை) நற்றவத்தோர் தாம் காண - நல்ல தவத்தையுடைய
ஆன்மாக்கள் தரிசிக்கத் தக்கதாக, - நாதாந்தத்து அஞ்செழுத்தால் உருவாய்
உற்று நின்றாடல் - நாதமுடியிலே சிவபிரான் பஞ்சாக்கரமே திருமேனியாகக்
கொண்டு நிருத்தஞ்செய்கிற முறைமையை, - உள்ளபடி நான் பெற்றிட -
உண்மையாக அடியேன் தரிசிக்கத்தக்கதாக,- விண்ணார் பொழில்வெண்ணெய்
மெய்கண்ட நாதனே - ஆகாயத்தை அளாவியிருக்கின்ற சோலைகள் சூழ்ந்த
திருவெண்ணெய் நல்லூரே திருப்பதியாகக் கொண்டெழுந்தருளியிருக்கிற
மெய்கண்ட தேவனே, - தண்ணார் அருளாலே சாற்று - குளிர்ந்த
கிருபையினாலே அருளல் வேண்டும்.                             30

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன்
சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்.           31

     (உரை) எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் - எட்டும்
இரண்டும் உருவாயிருக்கிற யகாரமாகிய ஆன்மாவிடத்திலே செய்யும்