(பொ
- ரை) ஆதிமுதலிருந்த மெய்யான திருவாக்காகவும்
ஒளியாகவும் இவ்வுலகத்துக்கு வந்தவரான காதல் மைந்தனைக்
கருணையினாற் தந்து பூதலத்திற்கு இரட்சிப்பைப் புதுப்பித்துண்டாக்கிய
பரமதந்தையின் பாதத்தை நமது சிரசிற்கு அலங்காரமாக்குவாம்.
(வி
- ரை) திருவாக்கென்றது ஆதியில் தேவனோடிருந்ததும்
தேவனாயிருந்ததுமான வார்த்தையை. ஒளி என்றது இவ்வுலகத்தை மூடிய
அஞ்ஞான அந்தகாரத்தை ஒழித்து தேவஞானத்தை உதிப்பிக்கின்ற
ஞானசூரியனாகிய எம்பெருமானை. இது கலிவிருத்தம். வாய்பாடு : - மா
-விளம் - விளம் - விளம்.
|
வேறு
கன்னி
பாலனாய்க் காசினி தனிலவ தரித்து
மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்
தன்னு யிர்ப்பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த
என்னு பாசனா மூர்த்தியை யஞ்சலித் திடுவாம். 5
|
(பொ
- ரை) கன்னிமரியாளின் பாலகனாய் இந்த உலகத்தில்
அவதரித்து, நிலைபெற்ற ஜீவகோடிகளெல்லாம் விண்ணுலகக்கதியைப்
பெறும்படிக்குத் தன் ஜீவனையும் பலியாகச் சிலுவையிற்கொடுத்த எனது
வழிபடுதெய்வமாகிய இரக்ஷண்ய மூர்த்தியை அஞ்சலிசெய்வாம்.
(வி
- ரை) முதல் நான்குபாட்டாலும் திரியேகத்துவத்தின் முதல்
அம்சமாகிய பிதாவை வணங்கியவர் மேல் வரும் இரண்டு பாடல்களாலும்
இரண்டாம் அம்சமாகிய குமாரனை ஸ்துதிக்கின்றார். அஞ்சலித்தல் என்பது
சிரமேல் கரந்தூக்கிக் கைகூப்பித் தொழுதல். இப்பாடல் கலிநிலைத்துறை.
|
வேறு
வானமும்
பூமியும் மகிழ்கொண் டோங்கிட
ஞானமு நன்மையு நனிசி றந்திட
ஊனமும் பாவமு மொழியத் தோன்றிய
தீனர க்ஷகன்பதஞ் சிந்தித் தேத்துவாம். 6
|
(பொ
- ரை) வானலோகமும் பூலோகமும் மகிழ்ச்சிகொண்டு
ஓங்கத் தக்கதாகவும், ஞானமும் நன்மையும் மிகுதியாகச்
சிறக்கத்தக்கதாகவும், குறைவும் பாவமும் ஒழியத்தக்கதாகவும்
இவ்வுலகத்தில் தோன்றிய, பல ஹீனரைக் காப்பாற்றும் இரக்ஷகனுடைய
பாதங்களைச் சிந்தனைசெய்து ஸ்தோத்திரிப்போமாக.
|
வேறு
சுருதியொளி
யகந்திகழ்த்தி யஞ்ஞான திமிரமறத்
துரந்தெஞ் ஞான்றும்
ஒருதனி ரக்ஷணியவழித் துணையாகி யடியோமை
யுய்யக் கொண்டு
|
|