பக்கம் எண் :

5

     (வி - ரை) இவ்விரண்டு கவிகளாலும் நூல் செய்தற்குக்காரணங்
கூறுகின்றார். இதே விஷயத்தைப்பற்றிக் கூறுகிற பரதேசியின் மோட்ச
பிரயாணமென்னும் வசனகிரந்தம் முன்னமே தமிழில் இருத்தலால்
"பாவருசெந்தமிழ்ப்பனுவல்' என்றார். இப்பாட்டு கலிவிருத்தம்.
வாய்பாடு : - விளம் - விளம் - மா - விளம்.

 
   

என்னனைய பாவியரிந் நிலவுலகில் யாண்டுமில
     ரெனினு நாயேன்
தன்னையொரு பொருளாகத் தடுத்தாண்ட கிறிஸ்தியேசு
     சாமி செய்ய
பொன்னனைய திருவடிக்குச் செந்தமிழ்மா லிகையொன்று
     புனைவா னெண்ணித்
துன்னுநவ ரக்ஷணிய யாத்திரிக மலரெடுத்துத்
     தொடுக்க லுற்றேன். 10

     (பொ - ரை) என்னைப்போன்ற பாவியர் இந்த நிலவுலகத்தின்
எவ்விடத்திலும் இல்லையென்றாலும் நாய்போன்ற எளியனாகிய
என்னையும் ஒரு பொருளாக மதித்துத் தடுத்தாட்கொண்ட கிறிஸ்தேசு
சுவாமியினது சிவந்த பொன்போலுமழகிய திருவடிகளுக்குச்
செந்தமிழ்மாலையொன்று சாத்தும்படி நினைத்து நெருங்கிய புதிதான
இரக்ஷணிய யாத்திரிக மலர்களையெடுத்து அம்மாலையைத் தொடுக்கத்
தொடங்கினேன்.

     (வி - ரை) இதுவும் நூல் செய்தற்குக் காரணங் கூறியவாறு:
"தடுத்தாண்ட" என்றது ஆசிரியரை வைஷ்ணவ மதத்தினின்று பிரித்து
இரக்ஷண்யசமயத்துள் பிரவேசிக்கச் செய்தலை. புனைவான் எதிர்கால
வினையெச்சம். அலங்காரம் உருவகம். இக்கவி அறுசீர் ஆசிரிய விருத்தம்.
வாய்பாடு: - காய் - - காய் - - காய் - - காய் - - மா - தேமா.

 
   

             வழி, எல்லை.

வித்தக கிறிஸ்து வேத விழுத்தகு பொருளை யாய்ந்து
நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ
பத்தனாம் பனியன் மேனாட் பாவனா சரித மாகச்
சத்தியந் திகழ்த்தி யுய்த்த தகைமையே தகைமை யாமால். 11

     (பொ - ரை) ஞானமயமாகிய கிறிஸ்துவேதத்தின் மேலான
விஷயங்களை ஆராய்ச்சிசெய்து நித்திய ஜீவமார்க்கத்தின் நிர்ணயத்தைக்
கடைப்பிடித்த தேவபக்தனாகிய பனியன் என்னும் ஆசிரியன் முன்னாளில்
பாவநாசரிதமாகச் சத்தியத்தை விளக்கிவைத்த தகைமையே
பெருந்தகைமையாகும்.

     (வி - ரை) இம்மூன்று பாட்டாலும் நூல் வந்த வழியையும் அது
வழங்கும் எல்லையையுங் கூறுகின்றார். பனியன் ஆசிரியர் சரிதம் யாவரும்
அறிந்தது. இரக்ஷணிய யாத்திரிகம் கதையை விசேஷ நோக்கமாக
பாராட்டாமல், ரக்ஷணிய மார்க்கத்துக்குரிய சத்தியத்தையே விளக்கும்படி