பக்கம் எண் :

சீறாப்புராணம்

1000


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவள் அவ்வாறு விட, ஒப்பற்றவ னான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் காருண்ணியத்தை யுடைய றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் நீண்ட கையை நீட்டி யிளைத்த அந்த ஆட்டின் முதுகி னிடத்தில் மெல்ல மெல்லத் தடவ, அஃது சொல்லுதற் கருமையாய் இடமானது தழைக்கப் பெற்றுச் சரீரம் பொலிவுற்றுக் குற்ற மறும் வண்ணம் மதர்த்து இளம் பிராயத் தோடு செழுமையும் பொதியப் பெற்றது.

 

2688. நிரைத்த செம்மயிர்க் குறங்குக ளகறர நிமிர்ந்து

     விரித்த திற்றிரண் டடிவயி றுறமடி வீங்கிச்

     சுரித்த சின்முலை நீண்டுவிம் மிதத்தொடுஞ் சுரந்து

     புரைத்த லந்திறந் தமுதெழுந் தோடன புவியில்.

13

      (இ-ள்) அன்றியும், வரிசை யாகிய செந் நிறத்தினது உரோமங்களை யுடைய தொடைகள் அகலும் வண்ணம் ஓங்கிப் பரவிய அதில் திரட்சி யுற்று அடி வயிற்றி னிடத்துப் பொருந்தும்படி மடி யானது பொலியப் பெற்றுச் சுருங்கிய சிறிய தனங்கள் நீண்டு விம்மிதத்தோடும் ஊறித் துவாரங்களின் தானங்கள் திறக்கப் பெற்றுப் பாலானது எழும்பி இப் பூமியின் கண் ஓடிற்று.

 

2689. மூத்தி ருந்தவ டனைவிளித் துனதுகை முறையாய்

     நாத்தி ருந்தநல் லமுதுகொள் கெனநபி நவில

     வாய்த்தி ருந்தது பசிக்கென வெழுந்துதன் மனைக்குட்

     பாத்தி ரந்தனை யெடுத்தனள் கறந்தனள் பாலை.

14

      (இ-ள்) அவ்வாறு ஓட, நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகிவசல்ல மவர்கள் விருத்தைப் பருவத்தை யடைந் திருந்தவ ளான அந்த உம்மி மகுப தென்பவளைக் கூப்பிட்டு உனது கையின் வரிசையாக நாவானது திருந்தும் வண்ணம் இவ்வாட்டினது நல்ல பாலைப் பெறுவாயாக வென்று கூற, அவள் நமது பசிக் காகப் பொருந்தி யிருந்த தென்று எழும்பித் தனது வீட்டினகத் திருந்த பாத்திரத்தைக் கையினாலெடுத்து அப் பாலைக் கறந்தாள்.

 

 

2690. வரங்கொண் மைமுலை யினுமொழு கினவென மகிழ்வி

     னரங்கி னுள்ளிருந் தெடுத்தபாத் திரமடங் கலினு

     மிரங்கும் பால்கறந் தணியணி நிரப்பின ளினியென்

     கரங்கள் சோர்ந்ததென் றிடைநிலஞ் சேர்த்தினள் கடைகால்.

15

      (இ-ள்) அவ்விதங் கறந்தும் வரத்தைக் கொண்ட அவ் வாட்டினது தனத்தில் நின்றும் பாலானது இன்னஞ் சிந்திற் றென்று சந்தோஷத்துடன் தனது வீட்டினது அறையி னகத் திருந்தெடுத்த