பக்கம் எண் :

சீறாப்புராணம்

1001


இரண்டாம் பாகம்
 

எல்லாப் பாத்திரங்களிலும் கசியா நிற்கும் அப்பாலைக் கறந்து வரிசை வரிசையாகச் செறித்து இனி யெனது கைகளானவை தளர்வுற்றன வென்று தான் கறந்த அந்தக் கடைகாலைப் பூமியின் கண் பொருந்தும்படி வைத்தாள்.

 

2691. அடுத்த கேளிருக் குரைத்தலு மவரவர் கரத்தி

     னெடுத்த பாத்திரந் தொறுந்தொறுங் கறந்தினி தேகி

     விடுத்த போதினு மொழுகிய சுரப்புமென் மேலுங்

     கொடுத்து நின்றது முகம்மது காரணக் கொறியே.

16

      (இ-ள்) அவ்வாறு வைத்த அவள் அச் சமாச்சாரத்தைப் பக்கத்திலுள்ள தனது சுற்றத்தார்களுக்குச் சொல்லிய மாத்திரத்தில், அந்த ஜனங்களும் வந்து தங்களின் கைகளிற் றாங்கிய பாத்திரங்களெல்லாவற்றிலும் அப்பாலைக் கறந்து இனிமையுடன் போன பொழுதும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் காரணத்தைக் கொண்ட அவ் வாடானது சிந்திய மடியினது வீக்கத்தை மென்மேலும் அளித்து நின்றது.

 

2692. வாய்ந்த மெல்லிடை யிடையர்தங் குலத்துறு மடவா

     ளாய்ந்த வர்க்கிடர் விளைப்பவர் வளமெனு மடுப்பிற்

     காய்ந்த பாலினை வடித்துவண் டாமரைக் கரத்தி

     னீய்ந்து நின்றன ளருந்தினர் துணையொடு மிறசூல்.

17

      (இ-ள்) அவ்விதம் நிற்க, சிறந்த மெல்லிய இடையை யுடைய இடையரினது கூட்டத்திற் பொருந்திய பெண்ணாகிய அந்த உம்மிமகுப தென்பவள் அறிவுடையோர்க்குத் துன்பத்தைச் செய்பவர்களின் முறைமை யென்று கூறா நிற்கும் அடுப்பினிடத்துக் காய்ந்த பாலை ஓர் பாத்திரத்தி லிறுத்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கமல மலரை நிகர்த்த கைகளில் கொடுத்துப் பக்கத்தில் நின்றாள். அதை அவர்கள் வாங்கித் தங்களின் நேச ராகிய அவ் வபூபக்கர் சித்தீகுறலி யல்லாகு அன்கு அவர்களோடும் புசித்தார்கள்.

 

2693. இதந்த ரும்பெரும் புதுமையை யருணபி யிறசூல்

     பதந்த னிற்பணிந் திருங்கலி மாமொழி பகர்ந்து

     மதந்த ழீஇயிசு லாமினி லாயினள் வணங்கி

     நிதந்த ருந்தவத் தொழுகையின் முறைவழி நின்றாள்.

18

      (இ-ள்) அவ்வாறு புசித்த பின் இனிமையைத் தரா நிற்கும் பெரிய அற்புதத்தைப் புரிந்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல