பக்கம் எண் :

சீறாப்புராணம்

1002


இரண்டாம் பாகம்
 

மவர்களினது சரணங்களில் அந்த உம்மி மகுப தென்பவள் தாழ்ந்து பெருமையை யுடைய ழுலாயிலாஹ இல்லல்லாகு முக்கமதுர் றசூ லுல்லாஹிழு யென்னுங் கலிமா வாகிய திரு வசனத்தைக் கூறித் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்திலாகிப் பணிந்து நித்தியமும் தவத்தைத் தருகின்ற வணக்கத்தினது ஒழுங்காகிய பாதையின் கண் அறிவானது பொருந்தப் பெற்று நின்றாள்.

 

2694. இன்று வந்திவ ணிருவர்க ளிருந்தனர் கிழவா

     டொன்று கண்டனர் பாலுரு வாக்கின ருலகிற்

     பொன்றி லாப்புகழ் விளைத்தனர் புதுமைகொ லெனவே

     நின்று நோக்கினர் பாடியிற் றொறுவர்க ணிறைந்தே.

19

      (இ-ள்) அவ்விதம் நிற்க, அந்த இடைச் சேரியின் கண்ணுள்ள இடையர்கள் இந்த ஊரினிடத்து இன்றையத் தினம் இருவர்கள் வந்துறைந்து கிழப்பருவத்தை யுடைய ஓ ராட்டைப் பார்த்து அதைப் பாலை யுடைய உருவாகச் செய்து இப் பூமியின் கண் அழியாத கீர்த்தியைச் சம்பாதித்தார்கள். இஃது ஆச்சரிய மென்று சொல்லிப் பொலிந்து நின்று பார்த்தார்கள்.

 

2695. தேயுஞ் சிற்றிடை மடந்தைய ளொருத்திதன் றிறத்தான்

     மாய வன்குபிர் போக்கிநந் நபிவழி வழுத்திப்

     பாய ரிக்கயல் விழிமட வாரொடும் பாடி

     யாயர் தங்குலத் தவரிசு லாமினி லானார்.

20

      (இ-ள்) அன்றியும், மெலியா நிற்கும் சிறிய மருங்குலையுடைய ஒரு பெண்ணினது வல்லமையினால் வஞ்சகத்தைக் கொண்ட கொடிய குபிர் மார்க்கத்தை யொழித்து நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க முறைமைகளைக் கூறித் தாவா நிற்கும் அழகிய கெண்டை மீனைப் போன்ற கண்களை யுடைய பெண்களுடன் அவ் வூரின்கண்ணுள்ள இடைக் குலத்தின ரியாவரும் ஈமான் கொண்டு இசுலா மானார்கள்.

 

2696. அற்றைப் போதினின் மக்கமா நகரவ ரறியச்

     சுற்றுங் காவதங் கேட்டிடக் கவிதையின் றொடராப்

     பற்ற லார்குலங் கெடச்செழுந் தீனிலை படர

     வெற்றி கொண்டொரு தொனிமுழங் கியதுவிண் ணிடத்தில்.

21

      (இ-ள்) அவ்வாறு இசுலாத்தி லான அன்றையத் தினத்தில் திரு மக்கமா நகரத்தின் கண்ணுள்ள ஜனங்கள் உணரவும், நான்கு பக்கங்களிலும் காத வழி தூரங் கேட்கவும், சத்துராதிக ளாகிய காபிர்களின் கூட்டம் சிதையவும், தீனுல் இஸ்லா மென்னும்